என் மலர்
நீங்கள் தேடியது "ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு"
- ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு கோவாவில் நடைபெறுகிறது.
- 12 ஆண்டுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்துள்ளார்.
பனாஜி:
இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு இன்றும் நாளையும் (மே 4, 5) கோவாவில் நடைபெற உள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், உறுப்பு நாடுகளுக்கு மாநாட்டில் பங்கேற்கும்படி இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. அந்த வகையில் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ சர்தாரிக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கு பாகிஸ்தான் அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது.
கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க கராச்சியில் இருந்து தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி இன்று கோவா வந்தடைந்தார்.
12 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
- இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ முறையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் மும்தாஸ் சாரா பாலோக் தெரிவித்துள்ளார்.
"இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதை டில நாடுகள் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டன. எந்தெந்த நாடுகள் கலந்து கொள்கின்றன என்பது பற்றிய தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
- மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார்.
- ராவல்பிண்டி விமான நிலையம் சென்ற மந்திரி ஜெய்சங்கரை அதிகாரிகள் வரவேற்றனர்.
இஸ்லாமாபாத்:
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமர்கள் பங்கேற்பார்கள். ஆனால், இந்தியா சார்பில் வெளியுறவு அல்லது பாதுகாப்புத்துறை மந்திரியே கடந்த காலங்களில் பங்கேற்றனர்.
இந்நிலையில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார். ராவல்பிண்டி விமான நிலையம் சென்றடைந்த மந்திரி ஜெய்சங்கரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராவல்பிண்டி விமான நிலையம் சென்ற மந்திரி ஜெய்சங்கரை அதிகாரிகள் வரவேற்றனர்.
- பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார்.
இஸ்லாமாபாத்:
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமர்கள் பங்கேற்பார்கள். ஆனால், இந்தியா சார்பில் வெளியுறவு அல்லது பாதுகாப்புத்துறை மந்திரியே கடந்த காலங்களில் பங்கேற்றனர்.
மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார். ராவல்பிண்டி விமான நிலையம் சென்றடைந்த மந்திரி ஜெய்சங்கரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் வந்துள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கைகுலுக்கி வரவேற்றார். அவர் அளித்த இரவு விருந்தில் ஜெய்சங்கர் பங்கேற்றார்.