என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிந்த கார்"

    • வனப் பகுதியில் உள்ள கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தாா்.
    • காரில் திடீரென தீப்பிடிக்கத் தொடங்கியது

    உடுமலை : 

    திருப்பூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் சசிகுமாா். இவா் தனது காரில் குடும்பத்துடன் சின்னாறு வனப் பகுதியில் உள்ள கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தாா்.அப்போது, காரில் திடீரென தீப்பிடிக்கத் தொடங்கியது. இதனைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த சிவகுமாா், அவா்களது குடும்பத்தினா் அலறியடித்துக் கொண்டு காரை விட்டு கீழே இறங்கினா். சிறிது நேரத்தில் காா் முழுவதும் தீப்பிடித்தது.இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை தீயணைப்புத் துறையினா் சுமாா் அரை மணி நேரம் போராடி காரில் பரவிய தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • இரணியல் வள்ளி ஆற்றின் கரையில் காரில் வந்து கொண்டு இருந்தார்
    • என்ஜின் பகுதியில் புகை வருவது கண்டு காரை ஓரமாக நிறுத்தினார்

    நாகர்கோவில் : திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் பென்னி சாலமன் (வயது 45). இவர் நேற்று தனது காரில் நாகர்கோவில் சென்றார். பின்பு இரவு 9 மணி அளவில் இரணியல் வள்ளி ஆற்றின் கரையில் காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது காரின் முன்பக்கம் என்ஜின் பகுதியில் புகை வருவது கண்டு காரை ஓரமாக நிறுத்தினார். அப்போது கவுன்சிலர் செந்தில் ராமலிங்கம் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் விட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் இதுகுறித்து திங்கள்நகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜான் வின்ஸ் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது. கார் தீப்பிடிக்க தொடங்கியதும் சாலமன் இறங்கி விட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    ×