என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கங்கம்"

    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு கூட்டம் கலெக்டர் கார்மேகம் நடைபெற்றது.
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு கூட்டம் கலெக்டர் கார்மேகம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தேங்காய், நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட உற்பத்திப்பொருட்களை இடைத்தரகர்கள், கமிஷன் இன்றி மறைமுக ஏல அடிப்படையில் அதிக பட்ச விலைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, சங்ககிரி, கொங்கணாபுரம், கொளத்தூர், மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, எடப்பாடி ஆகிய 14 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்று பயனடையலாம்.

    மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை சேலம், ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் தலா 2 இடங்களில் மேச்சேரி, வாழப்பாடி என 7 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட குளிர்பதனக் கிடங்குகளில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 997.9 மி.மீ ஆகும். ஏப்ரல் மாதம் முடிய இயல்பாக பெய்ய வேண்டிய மழையளவு 86.0 மி.மீ ஆகும். ஆனால் நடப்பு ஆண்டில் (30.4.2023 வரை) 76.5 மி.மீ மழை பெய்துள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் போன்ற இடுபொருட்கள் போதுமான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது. விவசாயிகள் பயன்பெற தங்கள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×