என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் கிரிக்கெட் அணி"
- 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
- இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சங்கள் எழுந்து வருகின்றன.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகி சர்மா தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அதேசமயம் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்றான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மீதும் அந்த அணி கேப்டன் பாபர் அசாம் மீதும் கடுமையான விமர்சங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நேபாள் அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் அசாமை சேர்க்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் மாலிக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எங்கள் அணியின் சிறந்த வீரர் யார்? என கேட்டால், பாபர் அசாம் என்று தான் கூறுவோம். ஆனால் குறிப்பிட்ட வடிவத்தில் நான் முதல் 4-5 அணிகளைப் பற்றி பேசுகிறேன். ஏனெனில் அந்த அணிகளின் விளையாடும் லெவனில் பாபர் அசாம் இடம் இருக்குமா? அதிலும் டி20 வடிவத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா அல்லது இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் பாபர் அசாம் இருப்பாரா? என்று கேட்டால் என்னுடைய பதில் இல்லை என்பது மட்டும் தான்.
என்னைக்கேட்டால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நேபாள் அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் அசாமை சேர்க்காது.
இவ்வாறு மாலிக் கூறினார்.
- நான் பல அணியுடன் வேலை செய்திருக்கிறேன்.
- ஆனால் இது போன்ற சூழ்நிலையை பார்த்ததில்லை.
புளோரிடா:
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணியானது 2 வெற்றிகள் மட்டுமே பெற்ற நிலையில் லீக் சுற்றுடன் வெளியேறியது.
முதலாவது ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், 2-வது ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. இதனால் கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னெற முடியவில்லை.
இந்நிலையில் பாகிஸ்தான் அனியில் ஒற்றுமை இல்லை என அந்த அணியின் பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. அவர்கள் அதை ஒரு அணி என்று அழைக்கிறார்கள். ஆனால் அது ஒரு அணி அல்ல. அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிக்கவில்லை. அனைவரும் இடது மற்றும் வலது என பிரிக்கப்பட்டுள்ளனர். நான் பல அணியுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் இது போன்ற சூழ்நிலையை பார்த்ததில்லை.
நாம் சிறந்தவர்களுடன் போட்டியிட விரும்பினால், நாம் நமது உடற்தகுதி மற்றும் திறன்களை மேம்படுத்தி ஒற்றுமையாக இருக்க வேண்டும். உடற்தகுதி அடிப்படையில் நாங்கள் மிகவும் பின்தங்கியுள்ளோம். தங்கள் உடற்தகுதியை மேம்படுத்த விரும்பும் வீரர்கள் மட்டுமே அணியில் இருப்பார்கள்.
இவ்வாறு கேரி கிர்ஸ்டன் கூறினார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
- இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் ஏமாற்றமான தோல்விகளை சந்தித்து நாடு திரும்பியது. தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பாபர் அசாம் தம்முடைய பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் ஜாம்பவான் இன்சமாம்-உல்-ஹக் தம்முடைய தேர்வுக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஷான் மசூட் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
அதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பாகிஸ்தான் அணியினருக்கு விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய வாரியம் சார்பில் பெரியளவு வரவேற்பு கொடுக்கவில்லை. விமான நிலையத்திற்கு வந்த பாகிஸ்தான் அணியினர் அங்கிருந்து ஹோட்டல் அறைக்கு செல்லும் போது அவர்களின் உடைமைகளை எடுத்து வைக்க ஆஸ்திரேலியா வாரியம் அல்லது பாகிஸ்தான் வாரியம் சார்பில் எந்த ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. அதன் காரணமாக பாபர் அசாம் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் தங்களுடைய உடைமைகளை கன்டெய்னர் லாரியிலிருந்து தாங்களே ஊழியர்களைப் போல எடுத்துக் கொண்டு சென்றனர்.
2023 உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்நாட்டவர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை என்பதால் பாகிஸ்தான் வீரர்களுக்கு வரவேற்பு கிடைக்காததில் ஆச்சரியமில்லை என்றே சொல்லலாம்.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக வஹாப் ரியாஸ் நேற்று நியமிக்கப்பட்டார்.
- இன்ஜமாம் உல்-ஹக் விலகியதைத் தொடர்ந்து 38 வயதான வஹாப் ரியாஸ் இந்த பொறுப்புக்கு வந்துள்ளார்.
லாகூர்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் நேற்று நியமிக்கப்பட்டார்.
இரட்டை ஆதாய சர்ச்சையால் சமீபத்தில் தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து இன்ஜமாம் உல்-ஹக் விலகியதைத் தொடர்ந்து 38 வயதான வஹாப் ரியாஸ் இந்த பொறுப்புக்கு வந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் பாகிஸ்தான் அணியை தேர்வு செய்வது அவரது முதல் பணியாக இருக்கும்.
- ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-வது இடத்தில் உள்ளது.
- நியூசிலாந்தை 1-4 என வீழ்த்திய பாகிஸ்தான் அணி 112 புள்ளிகளுடன் உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 299 ரன்கள் எடுத்ததது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்களும், உசாமா மிர் மற்றும் ஷதாப் கான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
300 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி ஒருநாள் தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தை பிடித்தது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் முறையாக பாகிஸ்தான் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. ஆனால் அந்த இடம் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை.
இருப்பினும், இந்தத் தொடருக்குப் பிறகு, பாகிஸ்தானின் தரவரிசையில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் தொடங்கும் முன், பாகிஸ்தான் 106 புள்ளிகளுடன் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. நியூசிலாந்தை 1-4 என வீழ்த்திய பாகிஸ்தான் அணி 112 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
ஐசிசி ஆண்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியா 113 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-வது இடத்தில் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்