என் மலர்
நீங்கள் தேடியது "நிதிஷ் ராணா"
- நிதிஷ் ரானா பொறுப்புடன் ஆடி அரை சதம் எடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- சூப்பர் ஓவரில் டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். 2025 தொடரின் 32-வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்னும், கே.எல்.ராகுல் 38 ரன்னும், அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் தலா 34 ரன்னும் எடுத்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டும் தீக்ஷனா, ஹசரங்கா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக ஆடியது. ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.
சஞ்சு சாம்சன் 31 ரன்னில் ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். நிதிஷ் ரானா பொறுப்புடன் ஆடி அரை சதம் எடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 0.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் சார்பில் ஹெட்மயர், பராக், ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா ஏன் சூப்பர் ஓவரில் களமிறக்கப்படவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக பேசிய நிதிஷ் ராணா, " சூப்பர் ஓவரில் யாரை அனுப்ப வேண்டும் என்று அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும். இது தனிப்பட்ட நபரின் முடிவு அல்ல. ஹெட்மயர் மற்றும் பராக்கை அனுப்பியது நல்ல முடிவு தான். ஹெட்மயர் எங்கள் அணியின் ஃபினிஷர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
- நிதிஷ் ராணா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
- எம்.எஸ்.தோனி சிறப்பான ஸ்டம்பிங் செய்து நிதிஷ் ராணா விக்கெட்டை தூக்கினார்.
ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ராணா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா அரைசதத்தை கடந்து சதத்தை நெருங்கி கொண்டிருந்தார்.
அஸ்வின் வீசிய 12 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு போர் என அதிரடியாக ஆரம்பித்தார் நிதிஷ் ரானா. அந்த ஓவரின் 3 ஆவது பந்தை வீசும்போது நிதிஷ் ரானா இறங்கி வந்து அடிக்க முயன்றதை முன்பே கணித்த அஸ்வின் பந்தை வைடாக வீசினார். அப்போது எம்.எஸ்.தோனி சிறப்பான ஸ்டம்பிங் செய்து நிதிஷ் ராணா விக்கெட்டை தூக்கினார்.
200 ரன்களுக்கு மேல் விளாசும் வாய்ப்பிருந்த ராஜஸ்தான் அணி 181 ரன்கள் அடித்ததற்கு அஸ்வின் எடுத்த இந்த விக்கெட் முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.
- முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.
- கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கொல்கத்தா:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.
பின்னர் 180 ரன் இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 11-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி 5-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நீடிப்பதுடன் முந்தைய லீக்கில் பஞ்சாப்பிடம் கண்ட தோல்விக்கும் பழிதீர்த்தது. பஞ்சாப் அணி சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.
இந்த நிலையில், கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீச வழங்கப்பட்ட நேரத்தைவிட, கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டதால் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
- ஜெய்ஸ்வால் இந்த தொடர் முழுவதுமே துவக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
- எனவே இந்த போட்டியில் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னராக முதல் ஓவர் வீசுவதில் அவ்வளவு பாதகம் இருக்காது என்று நினைத்தேன்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஐபிஎல் தொடரில் அதிவேக அரைச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் 2-வது ராஜஸ்தான் அணி விளையாடியது. இதன் முதல் ஓவரை கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா வீசினார். அதில் 26 ஓட்டங்களை ராணா வழங்கியிருந்தார்.
ஜெய்ஸ்வாலின் இன்னிங்சை பாராட்டியே ஆக வேண்டும் என கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறியுள்ளார்.
இது குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறியிருப்பதாவது:-
ஜெய்ஸ்வாலின் இன்னிங்சை பாராட்டியே ஆக வேண்டும். இந்த ஆட்டத்தில் அவர் என்ன நினைத்தாலும் அது நடந்தது. இந்த மைதானத்தில் 180 ரன்கள் அடித்தால் சரியாக இருக்கும் என்று ராசின் போது கூறினேன். ஆனால் எங்களது பேட்டிங் இன்று சிறப்பாக அமையவில்லை. இறுதியில் இரண்டு புள்ளிகளை நாங்கள் இழந்து விட்டோம்.
ஜெய்ஸ்வால் இந்த தொடர் முழுவதுமே துவக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே இந்த போட்டியில் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னராக முதல் ஓவர் வீசுவதில் அவ்வளவு பாதகம் இருக்காது என்று நினைத்தேன்.
மேலும் பேட்ஸ்மேன்கள் முதல் ஓவரில் சுதாரித்து ஆடுவார்கள் என்று திட்டமிட்டேன். ஆனால் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே இப்படி ஆடுவார் என்று எனக்கு தெரியாது.
இவ்வாறு நிதிஷ் ராணா கூறினார்.
- இம்பேக்ட் வீரர் உள்பட கொல்கத்தா வீரர்களுக்கு அனைவருக்கும் தலா 6 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 24 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா 18.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது.
இந்நிலையில், இப்போட்டியில் கொல்கத்தா அணி மெதுவாக பந்துவீசியதாக அந்த அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு 24 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இம்பேக்ட் வீரர் உள்பட கொல்கத்தா வீரர்களுக்கு அனைவருக்கும் தலா 6 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தின்போது காயம் அடைந்தார்.
- கொல்கத்தா அணியுடன் நேற்று இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைக் கேப்டன் நிதிஷ் ராணா. இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் விளையாடினார். பீல்டிங் செய்யும்போது அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆர்சிபி, டெல்லி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடவில்லை.
அவர் காயம் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில் காயம் குணமடைந்து இன்று அணியுடன் இணைந்துள்ளார். இது அணிக்கு பேட்டிங்கில் கூடுதல் பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நான்கு போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கெதிராக மட்டும் தோல்வியை தழுவியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணி அடுத்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வருகிற 14-ந்தேதி எதிர்கொள்கிறது.
- கொல்கத்தா அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நிதிஷ் ராணா 4-ம் இடத்தில உள்ளார்.
- நிதிஷ் ராணாவை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி ஒருமுறை கூட முயற்சிக்கவில்லை.
ஐ.பி.எல். மெகா ஏலத்திற்குப் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியி ரிங்கு சிங், சுனில் நரைன், ரஸல், ரமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகிய 6 வீரர்களை 57 கோடி கொடுத்து தக்க வைத்திருந்தது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா வீரரான வெங்கடேஷ் ஐயரை மிக அதிக விலையான 23.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதே சமயம் கடந்த 7 ஆண்டுகளாக கொல்கத்தா அணியில் சிறப்பாக விளையாடி நிதிஷ் ராணாவை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி ஒருமுறை கூட முயற்சிக்கவில்லை. இறுதியாக நிதிஷ் ராணாவை ரூ.4.2 கோடி கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியது.
கொல்கத்தா அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நிதிஷ் ராணா 4-ம் இடத்தில உள்ளார். 2023 ஆம் ஆண்டு காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடாத போட்டிகளில் நிதிஷ் ராணா தான் கேப்டன் பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நிதிஷ் ராணாவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி ஆர்வம் காட்டாமல் இருந்ததை அவரின் மனைவி சாச்சி மார்வா தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "விசுவாசம் என்பது மிகவும் விலை உயர்ந்தது, எல்லாராலும் அதை வாங்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
அதே சமயம் நிதிஷ் ராணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனது விசுவாசம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தான்" என்று ஸ்டோரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.