என் மலர்
நீங்கள் தேடியது "பொதுக் கூட்டம்"
- தி.மு.க. சார்பில், அரசின் 2-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், வெள்ளக்கல் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று நடந்தது.
- தலைமை கழக பேச்சாளர் வீரமுரசு கலந்து கொண்டு, கூட்டத்தின் நோக்கம் மற்றும் அரசின் 2-ம் ஆண்டு சாதனைகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறி பேசினர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில், அரசின் 2-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், வெள்ளக்கல் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று நடந்தது.
இந்த பொதுக் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.மல்லமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் மகாராஜன் வரவேற்று பேசினார்.
ஒன்றிய நிர்வாகிகள் மணி, தேவராசன், வெங்கடேசன், கலாராணி, மோகன், மாதையன், ராமநாதன் பிளாஸ்டிக் செல்வம், சவுளூர் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் வீரமுரசு கலந்து கொண்டு, கூட்டத்தின் நோக்கம் மற்றும் அரசின் 2-ம் ஆண்டு சாதனைகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறி பேசினர்.
இதில் சின்னசாமி, பீமன், ராமச்சந்திரன், பெருமாள், நடேசன், எல்லப்பன், சித்தன், முத்துராமன், அள்ளிமுத்து, மாரியப்பன், கலையரசன், பழனி, ராமு உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை கழக, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர். முடிவில் நிர்வாகி சரவணன் நன்றி கூறினார்,
- தமிழை புறக்கணித்து இந்தியை பாஜக திணிக்கிறது.
- நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிட்டவர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை அமைந்தகரையில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மொழிப்போர் தியாகிகள் நாளான இன்று, திருச்சியில் கருணாநிதிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சிலை திறந்துள்ளார்.
மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறேன். மொழிப்போர் களத்தில் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் முன்நின்றனர்.
தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள்.
இந்தி திணிப்பை எதிர்த்து 12 வயதில் களத்தில் நின்றவர் கருணாநிதி. உலகில் வேறெங்கும் மொழிக்காக இப்படி ஒரு போராட்டம் நடைபெற்றது இல்லை.
மொழிப் போராட்டத்திற்கு பிறகு தான் திமுக ஆட்சிக்கு வந்தது. மொழியின் பழம்பெருமையை பேசுவது மட்டுமே மொழிப்பற்று அல்ல.

மொழியை கல்வியறிவின் வாயிலாக வளர்த்தோம், அதனால் தான் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
தமிழை புறக்கணித்து இந்தியை பாஜக திணிக்கிறது. இந்தி பேசும் மக்களை ஏமாற்றவே, பாஜக இந்தி மொழியை கையில் எடுத்துள்ளது.
கொரோனாவை விட கொடியவர்கள் பாஜக அரசு. பாஜகவின் தோல்வி பட்டியில் மிக நீளமானது.
பாஜக ஆட்சியில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை பெரிதும் உயர்ந்துள்ளது. பாஜகவுக்கு நேற்று வரை ஆமாம் சாமி போட்டவர் எடப்பாடி பழனிசாமி.
நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. இந்தியா கூட்டணி ஆட்சி, உண்மையான கூட்டாட்சியாக அமையும்.
ராமர் கோவிலை காண்பித்து வடமாநில மக்களை திசை திருப்பி வருகிறது பாஜக. ஆனால், இந்த முறை வடமாநிலங்களிலும் பாஜக தோல்வியை சந்திக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகளும் வரவேற்பு அளித்தனர்.
- சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கு, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகளும் வரவேற்பு அளித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்கிறார்.
அங்கு, 500 மெகாவாட் வேக ஈனுலை மின் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
பின்னர், அங்கிருந்து நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
- அனைத்து நிகழ்ச்சிகளிலும் கீழ்க்கண்ட வழிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும்.
- கட்சி தலைமையிடம் அனுமதி பெற்ற பின்பே நடத்த வேண்டும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மாவட்ட நிர்வாகிகள், தலைவர்கள், அணித் தலைவர்களின் கவனத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தி்ன தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி இனி வரும் காலங்களில் தங்கள் மாவட்டத்தில் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டங்கள் பொதுக் கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கீழ்க்கண்ட வழிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும்.
முதலாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து, இரண்டாவதாக கொள்கைப்பாடல், மூன்றாவதாக உறுதிமொழி அதனை தொடர்ந்து தாங்கள் திட்டமிட்ட நிகழ்ச்சிகள். நிகழ்ச்சி நிறைவில் கழக கொடிப் பாடல் என மேற்சொன்ன அடிப்படையில் அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.
மேலும் தங்கள் மாவட்டம் சார்பில் நடத்தப்படும் ஆலோசனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ஆகியவை கட்சி தலைமையிடம் அனுமதி பெற்ற பின்பே நடத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.