என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிஜூ ஜனதா தளம்"
- பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
- 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மொத்தமுள்ள147 தொகுதிகளில் 78 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது.
51 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஜூ ஜனதா தளம் ஆட்சியை இழந்தது. அக்கட்சியின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஒடிசாவின் பா.ஜனதா முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
ஒடிசாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க தர்மேந்திர பிரதான் முக்கிய பங்காற்றினார். அக்கட்சி ஒடிசாவில் அமோக வெற்றி பெற தேர்தல் அறிக்கையும் முக்கிய காரணமாகும்.
அவர் தேர்தல் அறிக்கையை உருவாக்கிய குழுவை வழிநடத்தினார். இதில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,100 வழங்கப் படும், சுபத்ரா யோஜனாவின் கீழ் பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம் ஆகிய வாக்குறுதிகள் ஒடிசா மக்களை வெகுவாக கவர்ந்தது.
இதற்காக தர்மேந்திர பிரதானை பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா பாராட்டி இருந்தனர். மேலும் வி.கே. பாண்டியன் மீது விமர்சனம் மற்றும் பூரி ஜெகன்நாதர் கோவில் விவகாரம் குறித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
இதையடுத்து தர்மேந்திர பிரதான் ஒடிசா முதல்-மந்திரி பதவிக்கான முதல் போட்டியாளராக உருவெடுத்துள்ளார்.
- ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது.
- முதல்-மந்திரி நவீன்பட்நாயக்கின் சிறந்த மதிப்புகளுக்கு நான் இயற்கையான வாரிசு.
புவனேசுவரம்:
ஒடிசா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் வி,கே.பாண்டியன். தமிழகத்தை சேர்ந்தவரான இவர், முதல்-மந்திரி நவீன்பட்நாயக்கின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றினார். பின்னர் அவரது அழைப்பின்பேரில், விருப்ப ஓய்வு பெற்று பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார். தற்போது நவீன்பட்நாயக்கின் அரசியல் ஆலோசகராக உள்ளார்.
தற்போது ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இதில் வி.கே.பாண்டியன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே நேற்று புவனேசுவரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-மந்திரி நவீன்பட்நாயக் எனது குரு. நான் அவருடை சீடன். கட்சியில் நான் எந்த பொறுப்பிலும் இல்லை. சாதாரண வீரன்தான். ஒடிசா மக்களுக்காக நவீன்பட்நாயக் சிறப்பான சேவையாற்றி வருகிறார். அவருக்கு கீழ் பணியாற்றுவதை நான் பெருமையாக கருதுகிறேன். முதல்-மந்திரி நவீன்பட்நாயக்கின் சிறந்த மதிப்புகளுக்கு நான் இயற்கையான வாரிசு. பா.ஜனதாவினர் அரசியல் காரணங்களுக்காக என்னை அந்நியன் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒடிசா மக்கள் என்னை அப்படி சொல்லவில்லை. நான் ஒடிசாவில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். ஒடிசா மக்கள் என்னையும் அவர்களில் ஒருவராகப் பார்க்கிறார்கள். மிகவும் நேசிக்கிறார்கள். என்னை பலவீனப்படுத்த பா.ஜனதாவினர் இதுபோன்று கூறுகிறார்கள்.
இவ்வாறு வி.கே.பாண்டியன் கூறினார்.
- மூன்றாவது அணிக்கான முயற்சிகளில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.
- ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பல்வேறு தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அடுத்தடுத்த சந்திப்புகள் நடக்கின்றன.
அதேசமயம், மூன்றாவது அணிக்கான முயற்சிகளில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசா சென்று, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மூன்றாவது அணி தொடர்பாக பேசியிருக்கலாம் என தகவல் வெளியானது.
இந்நிலையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை புரிக்கு மாற்றுவது தொடர்பாக பேசியதாகவும் தெரிவித்தார். டெல்லியில் வேறு எந்த தலைவர்களையும் சந்திக்கும் திட்டம் இல்லை என்றும் கூறினார்.
நிதிஷ் குமாருடான சந்திப்பு மற்றும் மூன்றாவது அணி குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, 'என்னை பொருத்தவரை மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லை. வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் எந்த எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பிஜூ ஜனதா தளம் கூட்டணி வைக்காது, தனித்து போட்டியிடும்' என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்