search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீன அரசு"

    • சீன அரசாங்கம் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
    • ஒவ்வொரு வகுப்புக்கு பின்னரும் விடப்படும் இடைவெளி சமீபத்தில் 15 நிமிடமாக உயர்த்தப்பட்டது.

    பீஜிங்:

    இன்றைய இளம் தலைமுறையினர் ஆன்லைன் விளையாட்டுகளையே பெரிதும் விரும்புகின்றனர். வெளியில் சென்று விளையாடாமல் இருப்பதால் அவர்களுக்கு கண் பாதிப்பு, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    இதனை களைய சீன அரசாங்கம் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

    அதன்படி மாணவர்கள் தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் கட்டாயம் பங்கு பெற வேண்டும். மேலும் ஒவ்வொரு வகுப்புக்கு பின்னரும் விடப்படும் இடைவெளி சமீபத்தில் 15 நிமிடமாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நலம் மேம்படும் என சீன கல்வித்துறை துணை மந்திரி வாங் ஜியாயி தெரிவித்துள்ளார்.

    • ரெயிலால் விமானத்துக்கு நிகரான வேகத்தில் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
    • புல்லட் ரெயில் மூலம் பெய்ஜிங்கிலிருந்து-ஷாங்காய்க்கு 4.18 மணி நேரத்தில் செல்ல முடியும்.

    பெய்ஜிங்:

    சீன அரசு அதிவேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்லூப் ரெயிலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு டத்தோங் நகரில், இதற்கு என்று 2 கி.மீ தொலைவுக்கு வழித்தடத்தை உருவாக்கியது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் அதிவேக ரெயில் சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

    இந்த அதிவேக ரெயில் மாக்லேவ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல் படக் கூடியது. இந்த ரெயிலின் சக்கரம் தண்டவாளத்துடன் உராய்வு கொள்ளாது. இதனால், இந்த ரெயிலால் விமானத்துக்கு நிகரான வேகத்தில் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

    தற்போது 2 கி.மீ வழித் தடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த ரெயில் எதிர்பார்த்த வேகத்தை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஷாங்சி மாகாண அரசு மற்றும் சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில கழகம் இணைந்து அதிவேக ரெயில் திட்டத்தை மேற் கொண்டு வருகிறது.

    அதிவேக ரெயில் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சீனத் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் இடையே உள்ள 1,200 கி.மீ தூரத்தை 90 நிமிடங்களில் கடக்க முடியும். தற்போது சீனாவில் பயன்பாட்டில் இருக்கும், மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயில் மூலம் பெய்ஜிங்கிலிருந்து-ஷாங்காய்க்கு 4.18 மணி நேரத்தில் செல்ல முடியும்.

    • மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மூயிஸ் சீன ஆதரவாளராக கருதப்படுகிறார்.
    • சுற்றுலாவை பெரிதும் நம்பி உள்ள மாலத்தீவு, சீனாவின் பக்கம் சாய்ந்து வருவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    பீஜிங்:

    மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், சீனாவுக்கு 5 நாள் பயணமாக சென்று உள்ளார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் சீனா-மாலத்தீவு இடையே சுற்றுலா, பேரிடர் மேலாண்மை, கடல்சார் பொருளாதாரம், வர்த்தக வழித்தடம் உள்பட பல்வேறு துறைகளில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இது தொடர்பாக மாலத்தீவு அதிபர் அலுவலகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மாலத்தீவு அரசுக்கும், சீன அரசுக்கும் இடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இப்போது இரு நாட்டு அதிபர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று தெரிவித்துள்ளது.

    மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மூயிஸ் சீன ஆதரவாளராக கருதப்படுகிறார். அவர் பதவி ஏற்றதும் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படைகள் உடனே வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதற்கிடையே இந்திய பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு சென்றதை மாலத்தீவு மந்திரிகள் 3 பேர் விமர்சனம் செய்தனர். இதையடுத்து அவர்களை சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு உத்தரவிட்டது.

    இவ்விவகாரத்தால் இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் மாலத்தீவு அதிபர் சீனாவுக்கு சென்று அந்த நாட்டுடன் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் மாலத்தீவுக்கு சீனாவில் இருந்து சுற்றுலாவாக அதிகம் பேர் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    சுற்றுலாவை பெரிதும் நம்பி உள்ள மாலத்தீவு, சீனாவின் பக்கம் சாய்ந்து வருவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    மாலத்தீவு சுற்றுலா செல்வதில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். தற்போது பிரதமர் மோடியை விமர்சித்ததால் மாலத்தீவு பயணத்தை இந்தியர்கள் பலர் ரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஊழல் வழக்கில் 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகள் சிக்கியதாக இந்தோ- பசிபிக் தொடர்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    • முதல் காலாண்டு ஊழல் எதிர்ப்பு அறிக்கையில் 7 லட்சத்து 76 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதில் 2 லட்சத்து 31 ஆயிரம் புகார்கள் தொடர்பானது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    பீஜிங்:

    சீனாவில் ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் உள்ளது. இங்கு ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி விசாரணை மேற்கொண்டார். ஊழல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தது.

    இந்த புகார்களின் அடிப்படையில் ஊழல் வழக்கில் 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகள் சிக்கியதாக இந்தோ- பசிபிக் தொடர்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டில் மாநில அளவிலான அதிகாரிகள், துணை மாநில அதிகாரிகள், ராணுவகமிஷன் உறுப்பினர்கள், டஜன்கணக்கான மந்திரிகள் அலுவலக அதிகாரிகள் என பலர் சிக்கி இருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது. இதில் முக்கிய அதிகாரிகளும் அடங்குவர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

    முதல் காலாண்டு ஊழல் எதிர்ப்பு அறிக்கையில் 7 லட்சத்து 76 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதில் 2 லட்சத்து 31 ஆயிரம் புகார்கள் தொடர்பானது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ×