search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் பிடி திருவிழா"

    • தற்போது குளத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது இதனால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.
    • இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை, பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை மகிழ்ச்சியோடு கிராம மக்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டியில் சத்திரக்குளம் உள்ளது. இந்த குளம் கடந்த ஆண்டு பெய்த மழையால் முழுமையாக நிரம்பியது. தற்போது குளத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது இதனால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.

    இதற்காக நத்தம்,கோட்டையூர், கருத்தலக்கம்பட்டி, கும்பச்சாலை, கோசுகுறிச்சி, அரவங்குறிச்சி, சேத்தூர், குரும்பபட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து வந்த சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி மூங்கில்கூடை, வலை உள்ளிட்டவைகளை கொண்டு குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.

    இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை, பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கின. இவற்றை மகிழ்ச்சியோடு கிராம மக்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

    • ராஜக்காபட்டி ஊராட்சியில் சிறு குளம் உள்ளது.இந்த குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
    • சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை,கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக மீன்களை பிடித்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் ராஜக்காபட்டி ஊராட்சியில் சிறு குளம் உள்ளது.இந்த குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் சிறுகுளம் நிரம்பியது.விவசாயத்திற்கு சிறுகுளம் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது.இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து இன்று ஊராட்சி மன்ற தலைவர் பராசக்தி முருகேசன்,ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சிறு குளத்தின் அருகே உள்ள கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.அதன் பின்னர் சிறுகுளத்திற்கு ஊர்வலமாக வந்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த மீன்பிடி திருவிழாவில் சாணார்பட்டி,மணியக்காரன்பட்டி, கம்பிளியம்பட்டி,வடமதுரை,காணப்பாடி,ஆலம்பட்டி,செங்குறிச்சி,நத்தம் உள்பட பல்வேறு பகுதிகள் மற்றும் கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர்.சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை,கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக மீன்களை பிடித்தனர்.

    இதில் கட்லா, ஜிலேபி, விரால், தேளிவிரா, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன. கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த மீன்பிடி திருவிழாவில் பிடித்த மீன்களை கிராம மக்கள் தங்கள் இல்லங்களில் சமைத்து சாப்பிட்டனர்.இதனால் இந்த பகுதி முழுவதும் மீன் குழம்பு வாசம் கமகமவென்று வீசியது.

    • அணையில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் தனி நபரிடம் குத்தகைக்குவிட்டனர்.
    • சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணிமுத்தா அணைப் பகுதியில் திரண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மணிமுக்தா அணை அமைந்துள்ளது. இந்த அணையில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் தனி நபரிடம் குத்தகைக்குவிட்டனர். அவரின் குத்தகை காலம் முடிந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சூளாங்குறிச்சி, வாணியந்தல், ரங்கநாதபுரம், சூ.பாலப்பட்டு, அகரக்கோட்டாலம், அணை கரை கோட்டாலம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணிமுத்தா அணைப் பகுதியில் திரண்டனர்.

    தொடர்ந்து அணையில் இறங்கி வலையை வீசி விரால், ஜிலேப்பி, கட்லா, ரோகு கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 7000 கிலோ மீன்களை அள்ளி சென்றனர். இதனால் இப்பகுதி திருவிழா போல காட்சியளித்தது. 

    ×