என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bridge கல்லணை"
- இரும்பு ஷட்டர்கள் புதிதாக பொருத்தப்பட்டு அதன் மேலே உள்ள ஏற்றி இறக்கும் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
- பாதுகாப்பாக குளிப்பதற்கு ஏற்ற வகையில் தொட்டி போன்ற அமைப்பு புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் மற்றும் பாலங்களில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொள்ளிடம் ஆற்றில் இரும்பு ஷட்டர்கள் புதிதாக பொருத்தப்பட்டு அதன் மேலே உள்ள ஏற்றி இறக்கும் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன .
அதேபோல காவிரி,வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் மின்மயமாக்கப்பட்ட ஏற்றி இறக்கும் கருவிகள் சீரமை க்கும் பணி நடைபெற்று வருகிறது.
காவிரி ஆற்றில் சிறுவர் பூங்கா அருகில் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்படும் சமயங்களில் பாதுகாப்பாக குளிப்பதற்கு ஏற்ற வகையில் தொட்டி போன்ற அமைப்பு புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றின் உள்பகுதியில் நீரோட்டத்தை சீரமைக்கும் வகையில் தடுப்பு அமைப்புகள் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தோகூர்பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள வடிகால் பாலத்தை அதன் மேற்பகுதியில் உள்ள சிமெண்ட் கான்கிரீட்டுகளை அகற்றி சீரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
நடைபெற்று வரும் பணிகளை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், ஆகியோர் பார்வையிட்டனர்.
உதவி பொறியாளர்கள் திருமாறன், அன்பு செல்வன் ஆகியோர் செய்யப்படும் பணிகள் குறித்து விளக்கி கூறினர்.