என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தலைமை ஆசிரியர்கள்"
- தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்துவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை.
- அரசு பள்ளிகளில் ஏற்கனவே கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் 2994 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பள்ளி மணி நேரத்தின் பெரும் பகுதியை தலைமை ஆசிரியர் பணிக்கான கடமைகளை நிறைவேற்றுவதிலேயே கழிப்பதால் அவர்களால் பாடங்களை நடத்த முடியவில்லை. அதனால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் ஆகும். கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அப்போது தான் காலியாக உள்ள பிற ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு அவற்றை நிரப்ப முடியும். ஆனால், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்துவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை. அதனால் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும், பிற ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
அரசு பள்ளிகளில் ஏற்கனவே கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களையும் நிர்வாகப் பணிக்கு அனுப்ப வேண்டியிருப்பதால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் கல்வித்தரத்தை மேலும் சீரழித்து வருகிறது. இந்த நிலையை மாற்றி, காலியாக உள்ள அனைத்துத் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் இடமாறுதல் பெறுவத ற்கான கலந்தாய்வு தொடங்கியது.
- அவர்களுக்கு வேண்டிய பள்ளிகளில் இடம் மாறுதல் பெற்று சென்றனர்.
ஈரோடு, மே.15 -
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு இடமாறுதலுக்கான கலந்தாய்வு கடந்த 8-ந் தேதி தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக இந்த கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது.
கலந்தாய்வு
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் இன்று காலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் இடமாறுதல் பெறுவத ற்கான கலந்தாய்வு தொடங்கியது.
இதற்காக இன்று காலை முதலே முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு தலைமை ஆசிரியர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். இன்று காலை அவர்க ளுக்கான இடம் மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு தொடங்கியது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தை ராஜன் தலைமை யில் இந்த கலந்தாய்வு நடந்தது. தலைமை ஆசிரி யர்கள் இதில் கலந்து கொண்டு அவர்களுக்கு வேண்டிய பள்ளிகளில் இடம் மாறுதல் பெற்று சென்றனர்.
இதைத் தொடர்ந்து நாளை(செவ்வாய்க்கிழமை) நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும், அரசு மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் இடம் மாறுதல் பெறு வதற்கான கலந்தாய்வும் நடக்கிறது. முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாவட்ட த்திற்குள் இடம் மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நாளை மறுநாளும், வெளி மாவட்டம் இட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு வருகிற 18-ந் தேதியும் நடக்கிறது.
பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்து க்குள் மாறுதலு க்கான கலந்தாய்வு 19-ந் தேதியும், வெளி மாவட்ட த்துக்கான கலந்தாய்வு 20-ந் தேதியும், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட த்துக்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு 19-ந் தேதியும், வெளி மாவட்டத்து க்கான மாறுதல் 20-ந் தேதியும் நடைபெறுகிறது. பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு 22-ந் தேதியும், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 23-ந் தேதியும் நடைபெற உள்ளது.
கலை, இசை, தையல், இடைநிலை ஆசிரியர்க ளுக்கு மாவட்ட த்துக்குள் இடமாறு தலுக்கான கலந்தாய்வு 23-ந் தேதியும், வெளி மாவ ட்டத்துக்கான கலந்தாய்வு 24-ந் தேதியும் நடக்கிறது. இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்துக்குள் கலந்தா ய்வு 24-ந் தேதியும், பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு 25-ந் தேதியும், வெளி மாவட்டத்திற்கான கலந்தாய்வு 26-ந் தேதியும் நடைபெற உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்