என் மலர்
நீங்கள் தேடியது "வெங்கடேஷ் ஐயர்"
- ரஜினிகாந்த்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வருண் சக்கரவர்த்தி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துமுடிந்த இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தபட்சம் 1 விக்கெட்டையாவது வீழ்த்தி விடுகிறார். அசத்தலாக சுழற்பந்து வீசி வரும் வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்து வருகிறார்.
சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே 61-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. நடந்துமுடிந்த இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், வருண் சக்கரவர்த்தி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள அவர்,
வானத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்களை நாம் தினமும் பார்க்கலாம். ஆனால், சூப்பர் ஸ்டாரை பார்ப்பது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். குடும்பத்தில் ஒருவரைப் போல உணர வைக்கும் அளவுக்கு அவர் அன்புடன் பேசினார். லவ் யூ தலைவா" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவருடன் வெங்கடேஷ் ஐயரும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக வெங்கடேஷ் ஐயர் விளையாடி வருகிறார்.
- ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2021-ம் ஆண்டில் இந்திய டி20-க்கு அணிக்கு தேர்வானார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தவர்களில் வெங்கடேஷ் ஐயரும் ஒருவர் ஆவார். இவர் ஐ.பி.எல். மூலம் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஐ.பி.எல். தொடரில் 50 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 7 அரை சதங்களுடன் 1,326 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2021-ம் ஆண்டு அறிமுக தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த ஆண்டே இந்திய டி20-க்கு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 9 போட்டிகளில் விளையாடிய இவர் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பின் 2022-ம் ஆண்டு ஒருநாள் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம் வெங்கடேஷ் ஐயருக்கு, சுருதி ரகுநாதனுக்கும் நிச்சயதார்த்தம் முடிவடைந்தது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரரான தமிழகத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஐயர், தனது நீண்ட நாள் காதலியான சுருதி ரகுநாதனை இன்று கரம் பிடித்தார். பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடிக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
- கொல்கத்தா அணியை கேப்டனாக வழிநடத்த வாய்ப்பு கிடைத்தால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
- கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை.
புதுடெல்லி:
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன. கொல்கத்தா அணியின் கேப்டனாக சீனியர் வீரரான அஜிங்யா ரகானா அல்லது இளம் அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதில் இளம் வீரரான வெங்கடேஷ் ஐயர் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டனாக தன்னை நியமித்தால், அணியை வழிநடத்த தயாராக உள்ளதாக வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
கொல்கத்தா அணியை கேப்டனாக வழிநடத்த வாய்ப்பு கிடைத்தால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். எனக்கு தலைமை பண்பில் நம்பிக்கை இருக்கிறது. தலைவனாக அணியை வழிநடத்துவது மிகப்பெரிய பொறுப்பு. கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை.
அணியின் கேப்டனாகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன். கேப்டன் பொறுப்பை நிராகரிக்க எந்த ஒரு காரணமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுவரை 50 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியுள்ள வெங்கடேஷ் ஐயர் 1,326 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.