என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடுத்தடுத்து 2 வீடுகளின்"

    • வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறை சென்னி மலை ரோடு விக்னேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). இவர் திருப்பூரில் தனியாக கம்பெனி நடத்தி வருகிறார்.

    இவர் தனது மாமனாரின் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். இதையடுத்து சேகர் மட்டும் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதை தொடர்ந்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் தங்க செயின் உள்பட மொத்தம் 11 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

    இதேபோல் அதே பகுதி யை சேர்ந்தவர் துர்க்கைராஜ் என்பவர் பழனி கீரனூர் சென்றார். இதையடுத்து மீண்டும் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு திறந்திரு ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 1/2 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

    ஒரே பகுதியில் 2 வீடுகளில் நகை கொள்ளை போன சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ×