search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையலர்"

    • முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் கலெக்டர் கார்மேகம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • குறித்த நேரத்தில் சமைத்து வழங்கிய சமையலர் சோனியாவிற்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    சேலம்:

    ஏற்காட்டில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் கலெக்டர் கார்மேகம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இப்பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவினை தரமாகவும், சுவையாகவும், குறித்த நேரத்தில் சமைத்து வழங்கிய சமையலர் சோனியாவிற்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    மேலும், காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் நாள்தோறும் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • பெரம்பலூரில் காலை உணவு திட்டத்தில் சமையலர் தேர்வு நடைபெற உள்ளது
    • விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார்

    பெரம்பலூர்,

    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமையலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- சமையலர்கள் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. சமையலர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் அதே பகுதியை வசிப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுவில் 3 வருடம் உறுப்பினராக இருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அதே பள்ளியில் 1 முதல் 5 வரை படிப்பவராக இருத்தல் வேண்டும்.

    குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பழங்குடியின கிராமங்களில் 8-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஆண்டிராய்டு மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும்.மேற்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே ஊராட்சி அளவிலான தேர்வுக்குழுவால் சமையலர் பணி நியமனம் நடைபெறும். மேற்படி, சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான குழுவிடம் வருகிற 23-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு கலெக்டர் கற்பகம் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×