search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "King’s Higher Secondary School"

    • கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
    • தஞ்சாவூர் அரண்மனை சத்திர நிர்வாகம் அரசர் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 97 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அரண்மனை சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசர் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பிளஸ் -2 பொதுத்தேர்வில் 97 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த நிலையில் அரசர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    அரசர் மேல்நிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் நடந்த இந்த விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், கேடயம் வழங்கி பாராட்டினார். உயர்நிலைக் கல்வியில் சிறந்து படிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

    தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தை அதிகரித்த ஆசிரிய- ஆசிரியைக ளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் அரண்மனை சத்திர நிர்வாகம் அரசர் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 97 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாகும். தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்திய ஆசிரிய-ஆசிரியைகளுக்கு பாராட்டுக்கள்.

    இதுக்கு முன்னர் 4000 மாணவ- மாணவிகள் அரசர் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளனர். அந்த இலக்கை தாண்டி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.

    அடுத்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஆறு வகுப்பறைகள் கொண்ட உயர்நிலைப்பள்ளி கட்டிடத்திற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தொடக்கப் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டன.

    இந்த புதிய கட்டிடமானது தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ள கட்டிடம் போன்று அமைக்கப்ப ட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் உள்ளது போல் நாற்காலிகள், கரும்பலகை உள்ளிட்ட பல வகைகள் அமைத்துள்ளோம். இந்த கட்டிடம் கட்டுவதற்கு கடுமையாக உழைத்து உள்ளோம்.

    தற்போது உயர்நிலைப் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இன்று பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இந்த கட்டிடமும் தரமானதாக அமையும். தற்போது அரசர் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் சத்திரம் தாசில்தார் ஜெயலட்சுமி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொ றியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    ×