என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முள்ளிவாய்க்கால்"
- விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புத்தகங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.
- இலங்கையில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
கொழும்பு:
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் இலங்கை ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் 1½ லட்சம் ஈழத்தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். 15 ஆண்டுகளை கடந்த பிறகும் மறக்க முடியாத இன அழிப்பாகவே இது பார்க்கப்படுகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு மே 17-ந்தேதி தான் இலங்கை ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தி ஈழத்தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. அதனை ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் நினைவு தினமாக அனுசரித்து வருகிறார்கள்.
இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் தனிப்பெரும்பான்மையாக வசிக்கும் நிலையில் ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு கேட்டு போராடிய விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் எழுச்சி பெறும் நோக்கில் பல்வேறு நாடுகளில் திரைமறைவில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கம் தலைதூக்கி விடக்கூடாது என்பதில் இலங்கை அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 15-ம் ஆண்டு முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை கடைபிடிக்கப்பட உள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுதலைப்புலிகளை நினைவு கூறும் வகையில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இதையொட்டி இலங்கையில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக அந்நாட்டில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறும்போது, இதற்கு முன்பு நடைபெற்றுள்ள நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.
மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கம் உயிர் பெறவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு விடுதலைப்புலிகளள நினைவு கூறும் வகையில் யாராவது நிகழ்ச்சிகளை நடத்தினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இலங்கையில் தமிழ் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் நிறைவேந்தல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.
- மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- திரளானோர் கலந்து கொண்டு உயிர் நீத்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்
பல்லடம் :
பல்லடம் அருகே அருள்புரத்தில் இலங்கை முள்ளிவாய்க்கால் போரில் உயிர் நீத்த ஈழ தமிழர்களின் 14ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க., பொருளாளரும், பல்லடம் ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஆர். ரவி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளானோர் கலந்து கொண்டு உயிர் நீத்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்