என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தங்க நகை பறிப்பு"
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்றனர்.
- புகாரின் பேரில் போலீசார் மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி சேர்ந்த டேவிட் மனைவி சேவியர் அஞ்சல்மேரி (வயது 60). இவர் தனது 2 வது மகள் வீட்டிற்கு சென்று விட்டு நிலக்கோட்டை- மதுரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜிடம் கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
- மின்னல் வேகத்தில் 4 சவரன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
- காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள சின்ன காட்டூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது80). இவரது மனைவி அருக்காணி (75). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று வெள்ளகோவில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்துள்ளனர்.
காட்டூர் பிரிவு அருகே பஸ்ஸிலிருந்து இறங்கி இரண்டு பேரும் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் ஆறுமுகத்தை வீட்டில் கொண்டு விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் அவரை அங்கே இறக்கி விட்டு விட்டு, மீண்டும் அருக்காணி நடந்து வந்த இடத்திற்கு அருகே வந்துள்ளார். வந்த உடன் மின்னல் வேகத்தில் அவர் அணிந்திருந்த 4 சவரன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து அருக்காணி கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். உதவி செய்வது போல் நடித்து தங்க நகையை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.