search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் மஞ்சள்"

    • அம்மன் சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் நீர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.

    கவுந்தப்பாடி, 

    கவுந்தப்பாடி அருகே உள்ள ஓடத்துறை நஞ்ச கவுண்டன்பாளையம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 3-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. இதையொட்டி பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்துவரப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.

    அம்மன் சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். நேற்று மறுபூஜை அன்று மஞ்சள் நீர் திருவீதி உலா நடைபெற்றது. அதில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மாரியம்மன் சிலை உடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் நீர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.

    ஊர்வலமானது பள்ளிக்கூட ரோடு, வாய்க்கால் ரோடு, விநாயகர் வீதி, மெயின் ரோடு மற்றும் அனைத்து வீதிகளிலும் சென்றது. நிகழ்ச்சியில் பெண்கள் அம்மன் மஞ்சள் நீர் ஊர்வலத்தை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு வீடுகளிலும் தேங்காய், பழம் மஞ்சள் நீர் வைத்து வரவேற்றார்கள்.

    இதில் சிறுவர்கள் பெரியவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் மஞ்சள் நீர் ஊற்றி கொண்டாடினார்கள். மாலையில் மாரியம்மனுக்கு அக்னி அபிஷேகமும் சிறப்பு மகாதீபாரதனையும் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தார்கள்

    ×