search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறைத்து"

    • சினிமாவில் வருவது போல் டெம்போவை அதிகாரிகள் துரத்தி பிடித்தனர்
    • தக்கலை வழியாக கேரளாவுக்கு டெம்போவில் ரேசன் அரிசி கடத்தபடுவதாக தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் இருந்து தக்கலை வழியாக கேரளாவுக்கு டெம்போவில் ரேசன் அரிசி கடத்தபடுவதாக தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் தலைமையில் ஊழியர்கள் தக்கலை அருகே இரவிபுதூர்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத் திற்கிடமாக ஒரு டெம்போ வைக்கோல் ஏற்றிவந்தது. அதனை அதிகாரிகள் கை காட்டி நிறுத்தினர். ஆனால் டெம்போ நிற்காமல் வேகமாக சென்றது.

    உடனே அதிகாரிகள் அந்த டெம்போவை பின் தொடர்ந்து துரத்தி சென்ற னர். மார்த்தாண்டம் மேம்பாலத்தின் மீது சென்றபோது டிரைவர் டெம்போவை சாலையில் நிறுத்திவிட்டு இறங்கி ஓடினார். பின்னர் டெம்போவை சோதனை செய்த போது அதில் வைக்கோல் கட்டுகளுக்கு அடியில் நூதனமாக மறைத்து சுமார் 4 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கேர ளாவுக்கு கடத்துவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரேசன் அரிசியையும், டெம்போவையும் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்த ரேசன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சினிமாவில் வருவது போல் அதிகாரிகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று கடத்தல் வாகனத்தை பிடித்தது அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×