search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடந்த"

    • குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது புகார்
    • கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள் நடந்துள்ளது. நாகர்கோவில் சப்-டிவிஷனலுக்குட்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது.

    விபத்தில் காயமடைந்த வர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி களில் சேர்க்கப்பட்டுள்ள னர். தீபாவளியன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நடந்த விபத்துகளில் சுமார் 30 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக விபத்துகளில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக மாவட்டம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் வடசேரி, நேசமணி நகர், கோட்டார், ஆசாரிப்பள்ளம் பகுதியில் தீபாவளி பண்டிகையை யொட்டி குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக 10-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள். தகராறில் ஈடுபட்டு காயமடைந்தவர்களில் ஒரு சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச் சையில் உள்ளனர். இதேபோல் கன்னியா குமரி சப்-டிவிசனலுக் குட்பட்ட பகுதியிலும் குடி போதையில் வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குளச்சல், தக்கலை பகுதியிலும் குடி போதையில் மோதலில் ஈடுபட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மாவட்டந்தோறும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகிறது.
    • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பிறகு 2 நாட்களுக்குள் வீடு திரும்பி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டந்தோறும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் கடந்த 1-ந்தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் தினமும் நான்கு இடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறப்பு முகாம் நடத்தி காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று காலையிலும் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது.

    முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு முகாம் நடைபெற்ற பகுதியில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர். மருத்துவ முகாமில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, மேல்புறம், ராஜாக்கமங்கலம், முஞ்சிறை, கிள்ளியூர் உள்பட 9 ஒன்றியங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் இதுவரை 11,594 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 33 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் உள்ளது. தற்பொழுது டெங்கு அறிகுறியுடன் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் 2 பேரும், தக்கலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பிறகு 2 நாட்களுக்குள் வீடு திரும்பி வருகிறார்கள்.

    • மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது.
    • வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்ராஜ். இவர் பத்மநாபபுரம் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.

    இவருக்கு சொந்தமான இடம் மங்கலம் பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் செல்லுவதற்கு ரோடு எடுப்பதற்கு மங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வழி எடுக்க இடம் கொடுக்காததால் தான் கொடுத்த ரூபாயை திரும்ப கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    குலசேகரம் போலீசில் இது தொடர்பாக ஜஸ்டின் ராஜ் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதனால் ஜஸ்டின் ராஜிற்கு ஆதரவாக பத்மநாபபுரம் வக்கீல் சங்க தலைவர் வின்சென்ட் தலைமையில் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பலன் இல்லாததால் வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் கல்லுரி மாணவ-மாணவிகள் சென்ற வாகனங்கள், அரசு பஸ்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. போராட் டம் இரவு 7.30 மணி வரை நீடித்தது. இன்ஸ்பெக்டர் வந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று வழக்கறிஞர்கள் கூறினார்கள்.

    இதனால் குலசேகரம் பகுதியில் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாலை நேரமானதால் பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆவேச மடைந்து போராட்டம் நடத்தியவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    உடனடியாக குலசேகரம் இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இரவு தக்கலை டி.எஸ்.பி. குலசேகரம் போலீஸ் நிலையம் வந்து இன்ஸ்பெக்டருடன் ஆலோசனை நடத்தினார்.

    ×