என் மலர்
நீங்கள் தேடியது "தக்காளி விற்பனை"
- தமிழகத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேல் தக்காளி விலை அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.
- தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
சேலம்:
தமிழகத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேல் தக்காளி விலை அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை 100 ரூபாய்க்கு கீழ் குறையாமல் இருந்து வந்தது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் தக்காளி வாங்குவதை தவிர்த்து விட்டனர்.
அதேபோல் காய்கறிகள் விலை உயர்வாலும் பொது மக்கள் காய்கள் வாங்குவதை குறைத்து கொண்டனர். கிலோ கணக்கில் தக்கா ளியை வாங்கிச் சென்ற பொதுமக்கள் விலை உயர்வு காரணமாக கிராம் கணக்கில் தக்காளியை வாங்க ஆரம்பித்தனர்.
உழவர் சந்தை
சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் வெளி இடங்களை விட குறைவான விலைக்கு விற்கப்பட்டதால் பொது மக்கள் உழவர் சந்தைகளில் தக்காளி வாங்கிச் சென்ற னர். இதனால் குறைந்த நேரத்திலேயே தக்காளி விற்பனை முடிவடைந்தது.
சேலத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இந்த பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து குறைந்தது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளிகள் கொண்டுவரப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது.
தங்கத்தை போல் தக்காளி விலையும் உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் சேலத்தில் இன்று தக்காளி விலை திடீரென குறைந்தது. கிலோ ரூ.60 முதல் அதிகபட்சமாக ரூ.70 வரை தக்காளி விற்கப்பட்டது. இந்த விலை குறைவுக்கான காரணம் குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக உள்ளூர் தக்காளி வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவிலேயே தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது வழக்கம்போல் உள்ளூர் தக்காளிகள் வரத் தொடங்கிவிட்டது.
கடந்த சில நாட்களைவிட இன்று மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக விலையும் குறைந்தது. அதிகபட்சமாக சில்லறை விலையில் முதல் ரக தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இனிவரும் காலங்களில் படிப்படியாக தக்காளி விலை குறைந்துவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
- கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.50, சுரக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள். இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.10, கத்தரிக்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.30 , சின்ன வெங்காயம் ரூ. 50, உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.30, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.60, வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.150, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.50, சுரக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.