என் மலர்
நீங்கள் தேடியது "சர்வதேச நீளம் தாண்டுதல்"
- ஷைலி சிங் 6.65 மீட்டர் நீளம் தாண்டி 3வது இடத்தை பெற்றார்.
- ஷைலிக்கு ஆலோசகரும், முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனையுமான அஞ்சு ஜார்ஜ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
செய்கோ கோல்டன் கிராண்ட்பிரி தடகள போட்டி ஜப்பானின் யோகோஹாமா நகரில் நடந்தது. இதில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்திய இளம் வீராங்கனை ஷைலி சிங் 6.65 மீட்டர் நீளம் தாண்டி 3வது இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
முதல் 3 ரவுண்ட் வரை முன்னிலையில் இருந்த ஷைலி அதன் பிறகு பின்தங்கி விட்டார். ஜெர்மனியின் மேரிஸ் லுஜோலா தங்கப்பதக்கமும் (6.79 மீ), ஆஸ்திரேலியாவின் புரூக் புஸ்குல் வெள்ளிப்பதக்கமும் (6.77 மீ) பெற்றனர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷைலி உலக அளவில் சீனியர் பிரிவில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும். அவருக்கு ஆலோசகரும், முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனையுமான அஞ்சு ஜார்ஜ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "ஷைலிக்கு இது மிகப்பெரிய சாதனை. அவருக்கு வயது வெறும் 19 தான். இந்த போட்டியில் குறைந்த வயது வீராங்கனையும் இவர் தான். தங்கம், வெள்ளி வென்றவர்களின் வயது கிட்டத்தட்ட 30. ஷைலிக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை" என்றார்.