என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அண்ணாமலை யாத்திரை"
- தி.மு.க. ஆட்சி தற்போது மக்களுக்கு எதிரான ஆட்சியாக உள்ளது.
- மதுவினால் வரும் வருமானத்தை வைத்து தான் தற்போது ஆட்சி செய்து வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம்:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணத்தின் தொடர்ச்சியாக நேற்று மதுரையில் யாத்திரையை தொடங்கினார்.
இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் இன்று காலையில் பாதயாத்திரை நடைபெற்றது. திருநகரில் ஆரம்பித்த அவரது நடைபயணம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் நிறைவு பெற்றது. தொடர்ந்து அவர் திருப்பரங்குன்றம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது பா.ஜ.க. தொண்டர்கள் அவருக்கு செங்கோலை பரிசாக வழங்கினர்.
மேலும் நடை பயணத்தின் போது வழிநெடுகிலும் பா.ஜ.க.வினர் அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்தனர். 16 கால் மண்டபத்தில் அண்ணாமலை தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சி தற்போது மக்களுக்கு எதிரான ஆட்சியாக உள்ளது. தமிழகத்தில் சௌராஷ்டிரா மக்கள் அதிக அளவு உள்ளனர். விசைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள கொடுத்த தி.மு.க. அரசு தற்போது வரை எதுவும் செய்யவில்லை. தமிழகம் தற்போது இந்திய அளவில் கடன் வாங்குவதில் முதல் மாநிலமாகவும், ஊழல் செய்வதில் மற்றும் மது விற்பனையில் முதல் மாநிலமாகவும் உள்ளது.
மதுவினால் வரும் வருமானத்தை வைத்து தான் தற்போது ஆட்சி செய்து வருகிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன் 2014-ல் 24 கோடி பெண்கள் மட்டுமே வங்கி கணக்கு வைத்திருந்தனர். ஆனால் தற்போது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 79 கோடி பெண்கள் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர்.
201-ல் 11 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே பெண்களுக்கு தனி கழிப்பிடங்கள் இருந்தது. ஆனால் தற்போது 100 சதவீத பள்ளிகளில் தனி கழிப்பிடங்களை மோடி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். தி.மு.க. அரசு பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால் அதில் பெரும்பாலானோருக்கு பணம் கிடைக்காது.
இதே போல நகைக்கடன், கல்வி கடன் திருப்பி வழங்கப்படும் என கூறி பொய் வாக்குறுதிகள் அளித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இதே போலவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் பல்வேறு பொய் வாக்குறுதிகள் அளித்து உங்களை ஏமாற்ற வருவார்கள். தமிழகம், பாண்டிச்சேரி என 40 தொகுதிகளிலும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினரை வெற்றி பெற வைத்து நமது முழு ஆதரவை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து அவர் திருமங்கலம் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபயணத்தை முடித்து விட்டு மதியம் மதுரையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
- செல்லூர் ராஜூவின் இந்த பேட்டி பா.ஜ.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
திருப்பத்தூர்:
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், அண்ணாமலை பா.ஜ.க. மாநிலத் தலைவர் மட்டும் தான். எங்களுக்கு மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் மட்டுமே முக்கியம். டெல்லியில் நடந்த கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மோடி அருகில் அமர வைத்தார். மோடிக்கு தெரிந்த எடப்பாடியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை என்று கூறினார். செல்லூர் ராஜூவின் இந்த பேட்டி பா.ஜ.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று இரவு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபயணம் மேற்கொண்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குடியிலும், கடனிலும் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. 30 சதவீதம் கமிஷன் கேட்பதால் எந்த ஒரு தொழிற்சாலையும் தமிழகத்திற்கு வருவதில்லை. பிரதமர் மோடி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
உலகில் பொருளாதார வளர்ச்சியில் 5-வது நாடாக இந்தியா உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களுக்கும் மோடி எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்குகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நிருபர்கள் செல்லூர்ராஜூ பேட்டி குறித்து அண்ணாமலையிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது.மேலும்,நாங்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. மக்களை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம். மக்களே எங்களுக்கு எஜமானர்கள்.
மெஜாரிட்டி, மைனாரிட்டி பாலிடிக்ஸ் தான் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, மைனாரட்டி மெஜாரிட்டி என்பது ஒரு புரிதலுக்காக கொண்டு வரப்பட்டது என்றும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மைனாரிட்டி என்ற வார்த்தைகளுக்கு மட்டும்தான் சிறப்பு சலுகைகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
- யாத்திரையின் போது 10 இடங்களில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
- கூட்டங்களில் கலந்து கொண்டு பேச 10 மத்திய மந்திரிகளும் வருகை தர உள்ளார்கள்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் கடந்த 28-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து பாத யாத்திரை தொடங்கினார். மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். இன்று 5-வது நாளாக யாத்திரை நடக்கிறது.
முதற்கட்டமாக தென் மாவட்டங்களில் வருகிற 22-ந்தேதி வரை யாத்திரை நடக்கிறது. அதன் பிறகு சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு அடுத்த கட்ட யாத்திரை தொடங்கும். மொத்தம் 5 கட்டங்களாக நடைபெறும் இந்த யாத்திரை ஜனவரி 11-ந்தேதி சென்னையில் நிறைவடைகிறது.
நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த யாத்திரையின் போது 10 இடங்களில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பேச 10 மத்திய மந்திரிகளும் வருகை தர உள்ளார்கள்.
உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய மந்திரிகள் நிதின்கட்காரி, ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான், மன்சுக் மாண்டவியா, பூபேந்தர் சிங் யாதவ், பியூஸ்கோயல், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- இளைஞர்கள், தன்னார்வலர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் தாமாகவே யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள்.
- யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி நடைபயணம் தொடங்குகிறார். இந்த நடைபயண விவரங்கள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகிறார் மத்திய மந்திரி அமித்ஷா நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.
அன்றைய தினம் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.
மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த யாத்திரை நடைபெறுகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி நடைபெறும் முதற்கட்ட யாத்திரை ஆகஸ்ட் 22-ந்தேதி நிறைவடைகிறது.
அதன் பிறகு சிறு சிறு இடைவெளிகளுடன் அடுத்தடுத்த கட்டங்களாக யாத்திரை நடைபெறும். ஜனவரி மாதம் சென்னையில் யாத்திரை நிறைவடையும். தமிழ்நாட்டில் தூய்மையான நேர்மையான அரசாங்கம் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெறும் மோடி அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்த பயணம் அமையும்.
தேசிய ஜனநாயக கூட்டணி வருகிற தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராகும் இலக்கோடு இந்த பயணத்தை மக்கள் மத்தியில் நடத்துகிறோம்.
தமிழ்நாட்டில் தி.மு.க. வின் ஊழல் நிறைந்த ஆட்சியையும் இந்த ஆட்சியின் அவலங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது இந்த பயணத்தின் பிரதான நோக்கமாக இருக்கும். பிரசாரத்தின் போது வழி நெடுக பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கும் சாதனைகளை 10 லட்சம் புத்தகங்களாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
மேலும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மக்களுக்கு எழுதியுள்ள கடிதங்களை ஒரு கோடி குடும்பங்களுக்கு விநியோகிக்க இருக்கிறோம்.
நடை பயணத்தின் போது பதினோரு இடங்களில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில் அகில இந்திய தலைவர்கள் மத்திய மந்திரிகள் பங்கேற்பார்கள். இது தவிர நூற்றுக்கணக்கான தெரு முனை கூட்டங்களில் அண்ணாமலை உரையாற்றுவார்.
மேலும் கிராமசபை கூட்டங்களிலும் பங்கேற்று மக்களுடைய குறைகளை கேட்டு அறிவார். அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
முக்கியமான இடங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்படும் அதை வைத்து தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் பல கட்சிகளும் யாத்திரைகள் நடத்தி இருக்கலாம். இந்த யாத்திரை அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதும் யாத்திரை நிறைவு பெறும்போது அரசியலில் திருப்பு முனையை உருவாக்கும், யாத்திரையில் கலந்து கொள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்.
இளைஞர்கள், தன்னார்வலர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் தாமாகவே இந்த யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள். இதை கட்சி யாத்திரையாக கருதாமல் தமிழக அரசியலில் ஒளி ஏற்றும் திருவிழாவாக மக்கள் கொண்டாடுவார்கள்.
இந்த யாத்திரையின் போது மக்கள் புகார் பெட்டி ஒன்றும் எடுத்துச் செல்லப்படும். விடியல முடியல என்ற முழக்கத்தோடு கொண்டு செல்லப்படும்.
இந்த பெட்டியில் மக்கள் தங்கள் புகார்களையும் எழுதி போடலாம். யாத்திரை நிறைவில் பிரதமர் மோடியும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கி.பி.துரைசாமி யாத்திரையின் பொறுப்பாளர் நரேந்திரன் இணைப்பு பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
- அண்ணாமலை முதற்கட்டமாக 100 நாட்கள் யாத்திரை செல்கிறார்.
- அண்ணாமலையின் யாத்திரை திட்டங்கள் தொடர்பாக வருகிற ஜூன்1-ந்தேதி கட்சியின் உயர்நிலைக் குழு கூடி ஆலோசிக்கிறது.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே தமிழ் புத்தாண்டு அன்று தொடங்க இருந்த இந்த யாத்திரை கர்நாடக தேர்தல் காரணமாக தள்ளிப்போனது. தற்போது ஜூலை 9-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான சுற்றுப்பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. தினசரி இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்லும் வகையில் பயணத் திட்டம் தயாராகி வருகிறது. முழுவதுமாக யாத்திரை இல்லாமல் சில இடங்களில் வாகனங்களில் செல்லும் வகையில் பயணத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. அண்ணாமலை முதற்கட்டமாக 100 நாட்கள் யாத்திரை செல்கிறார்.
அண்ணாமலையின் யாத்திரை திட்டங்கள் தொடர்பாக வருகிற ஜூன்1-ந்தேதி கட்சியின் உயர்நிலைக் குழு கூடி ஆலோசிக்கிறது. அன்றைய தினமே தி.மு.க.வின் இரண்டாவது ஊழல் பட்டியலும் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஜூன் மாதம் 30 நாட்களும் மோடி 9.0 என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் 9 ஆண்டு சாதனை விளக்க தெரு முனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்