என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நியமன ஆணைகள்"
- நிள அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு 90 நாட்களுக்கான நில அளவை பயிற்சி கடலூர் அருகே நடைபெற்றது.
- செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.
கடலூர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 922 நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் கடந்த 15-ந்தேதி தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 102 நிள அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு 90 நாட்களுக்கான நில அளவை பயிற்சி கடலூர் அருகே நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், உதவி இயக்குனர்கள் திருநாவுக்கரசு, சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றினார்கள். இதில் பங்கேற்றுள்ள 102 நில அளவர் மற்றும் வரைவாளர்கள் பயிற்சி முடித்து கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணியில் ஈடுபட உள்ளனர். பயிற்சியில் ஈடுபடும் நில அளவர்கள் மற்றும் வரைவாளர்கள் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. கடலூர் கோட்ட ஆய்வாளர் நாராயணன் நன்றி கூறினார்.