search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காணி இனம்"

    • மேல்படிப்பு படிக்க பேச்சிப்பாறை வரவேண்டும். அதற்கு படகில் செல்ல வேண்டும்.
    • மாணவ-மாணவிகளின் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள தச்சமலை, தோட்ட மலை பகுதிகளில் ஏராள மான காணி இன மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இங்குள்ள மாணவ, மாணவிகள் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று அதிகாரி களிடம் தெரிவித்தனர். உடனே அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் கலெக்டர் அலுவலக கூட்டரங்குக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் ஆகியோரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தச்சமலை, தோட்ட மலை பகுதியில் தொடக்க பள்ளி மட்டுமே உள்ளது. அங்கிருந்து மேல்படிப்பு படிக்க பேச்சிப்பாறை வரவேண்டும். அதற்கு படகில் செல்ல வேண்டும். இதுவரை தொண்டு நிறுவனம் ஒன்று படகு சவாரிக்கான கட்டணத்தை வழங்கி வந்தது. தற்போது நிதிநெருக்கடி காரணமாக அந்த நிறுவனம் படகு கட்டணம் வழங்க முடியாத நிலையில் உள்ளது.

    எனவே எங்கள் படிப்பை தொடர எங்கள் பகுதியிலேயே உயர் நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு களை தொடங்க வேண்டும். மேலும் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க தேவையான வசதிகளையும் செய்து தரவேண்டும் என்றனர்.

    மாணவ-மாணவிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட கலெக்டர், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித் தார். மாணவிகளுக்கு தேவையான போக்குவரத்து வசதி மற்றும் அவர்கள் தொடர்ந்து மேல் படிப்புக்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் கூறினார்.

    ×