search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருநாள் உலக கோப்பை"

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது.
    • ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    அகமதாபாத்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் சந்திக்கிறது.

    இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த பென் ஸ்டோக்ஸ் தற்போது அந்த முடிவை திரும்பப் பெற்றுள்ளார் . இதனால் பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.

    இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் அணியில் இடம்பெறவில்லை.

    உலக கோப்பைக்கான தற்காலிக இங்கிலாந்து அணி:

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்திடம் தோற்றதால் உலக கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை முதல்முறையாக இழந்தது.
    • ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து இடையே நாளை நடைபெறும் போட்டி முக்கியமானது.

    புலவாயோ:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

    எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. 10 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தகுதி சுற்றில் தற்போது 'சூப்பர் சிக்ஸ்' போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்திடம் தோற்றதால் உலக கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை முதல்முறையாக இழந்தது.

    நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

    உலக கோப்பை போட்டிக்கு 2-வதாக தகுதி பெறும் அணி எது? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான போட்டியில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து அணிகள் இருக்கின்றன.

    சூப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை 8 புள்ளியுடனும், ஜிம்பாப்வே 6 புள்ளியுடனும், ஸ்காட்லாந்து 4 புள்ளியுடனும், நெதர்லாந்து 2 புள்ளியுடனும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ், ஓமன் அணிகள் இன்னும் புள்ளி எதுவும் பெறவில்லை.

    ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து இடையே நாளை நடைபெறும் போட்டி முக்கியமானது. இதில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

    • இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது.
    • 3-வது ஆட்டத்தில் பரம எதிரியாக பாகிஸ்தானை அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் மோதுகிறது.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ( 50 ஓவர்) இந்தியா நடத்துகிறது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஐசிசி உலக கோப்பை தொடருக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.


    அகமதாபாத்தில் அக்டோபர் 5-ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது. 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 11-ந் தேதி எதிர்கொள்கிறது. 3-வது ஆட்டத்தில் பரம எதிரியாக பாகிஸ்தானை அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் மோதுகிறது.


    இந்திய அணி மோதும் விவரம்:-

    இந்தியா - ஆஸ்திரேலியா அக்டோபர் 8 - சென்னை

    இந்தியா - ஆப்கானிஸ்தான் அக்டோபர் 11 - டெல்லி

    இந்தியா - பாகிஸ்தான் அக்டோபர் 15 - அகமதாபாத்

    இந்தியா - வங்களாதேசம் அக்டோபர் 19 - புனே

    இந்தியா - நியூசிலாந்து அக்டோபர் 22 - தர்மசாலா

    இந்தியா - இங்கிலாந்துஅக்டோபர் 29 - லக்னோ

    இந்தியா - குவாலிபையர்-2நவம்பர் 2 - மும்பை

    இந்தியா - தென் ஆப்பிரிக்காநவம்பர் 5 - கொல்கத்தா

    இந்தியா - குவாலிபையர்-1நவம்பர் 11 - பெங்களூரு

    • இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே உறவு டி20 கிரிக்கெட் போல அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது.
    • அந்த நேரத்தில் இந்தியாவில் நடக்கும் பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டத்தையும் நீங்கள் பார்க்கலாம்.

    சிட்னி:

    10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

    இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்தியா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிசுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர் இது தொடர்பாக சிட்னியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே உறவு டி20 கிரிக்கெட் போல அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வருமாறு இந்தியாவுக்கு அழைக்கிறேன்.

    அந்த நேரத்தில் இந்தியாவில் நடக்கும் பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டத்தையும் நீங்கள் பார்க்கலாம்.

    இவ்வாறு மோடி கூறினார்.

    ×