என் மலர்
நீங்கள் தேடியது "Jamabandhi. பயனாளிகள்"
- ஜமாபந்தியில் 967 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- 57 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையை கலெக்டர் வழங்கினார்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் அம்மாபேட்டை சரகத்திற்கு இறுதி நாளாக ஜமாபந்தி நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து கடந்த 6 நாட்களாக நடைபெற்ற ஜமாபந்தியில் 967 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இறுதி நாளில் வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட மனுக்களில் சமூக பாதுகாப்பு திட்ட பயனாளிகள் 54 நபர்களுக்கும், 25 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், 10 நபர்களுக்கு தனிப்பட்டா, 57 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, 2 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ், 1 நபருக்கு மின் இணைப்பு சான்றிதழ் என மொத்தம் 184 பயனாளிக ளுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் உதவித்தொகை மற்றும் ஆணைகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
இவ்விழாவில் கல்யாண சுந்தரம் எம்.பி, ஜவாஹிரு ல்லா எம்.எல்.ஏ, பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், தாசில்தார் பூங்கொடி, மாவட்ட துணைச் செயலாளர் கோவி.அய்யாராசு, தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பேரூர் செயலாளர் கபிலன், வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார்.
சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் முருககுமார் , திருவையாறு ஆதித்திராவிடர் நலத்துறை தனி வட்டாச்சியர் நெடுஞ்செழியன் , கலால் தாசில்தார் ரத்தினவேல் , துணை வட்டாட்சியர்கள் விவேகானந்தன், பிரியா, விமல், அன்புக்கரசி, வருவாய் ஆய்வாளர் சாந்தி, மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.