search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜம்மு"

    • 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதி.
    • விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜம்மு- பூஞ்ச் நெடுஞ்சாலையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்டுள்ள விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, அக்னூர் பகுதியில் உள்ள தாண்டா மோர் என்ற பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்த நிலையில், பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இணையதளத்தில் வித்தியாசமான, சுவாரஸ்யமான சில நேரங்களில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யமான வீடியோக்கள் உலா வருவது வழக்கம்.
    • ஜம்முவில் இருந்து கத்துவாவிற்கு செல்லும் ரயிலில் உள்ள பொதுப் பெட்டியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் திடீரென வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குகின்றனர்.

    இணையதளத்தில் வித்தியாசமான, சுவாரஸ்யமான சில நேரங்களில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யமான வீடியோக்கள் உலா வருவது வழக்கம். அந்த வகை வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தைக் கிளப்பத் தவறுவதில்லை.

    வியக்க வைக்கும் இந்த வீடியோக்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளும் எழாமலில்லை. அந்த வகையில் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஜம்முவில் இருந்து கத்துவாவிற்கு செல்லும் ரயிலில் உள்ள பொதுப் பெட்டியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் திடீரென வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குகின்றனர்.

    அவர்களது முக பாவனைகள் வினோதமாக மாறுகிறது. தங்களது உடலை வளைத்து உறுமுவது போன்ற சத்தத்தை வெளியிடுகின்றனர். பேய் பிடித்தது போல அவர்கள் நடந்துகொள்கின்றனர். ஆனால் அருகில் உள்ளவர்கள் எந்த பயமும் இல்லாமல் தங்களது இடங்களிலேயே அமர்ந்து அந்த பெண்களை வேடிக்கை பார்க்கின்றனர்.

     

    இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களும் அந்த பெண்களை நம்புவதாக இல்லை. டிக்கெட் எடுக்காமல் டிடிஇ இடமிருந்து தப்பிக்கவே இப்படியொரு நாடகத்தை அந்த பெண்கள் அரங்கேற்றியுள்ளனர். அதனாலேயே அருகில் உள்ளவர்கள் பயப்படவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • சர்வதேச எல்லைகள் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.
    • ஜம்மு காஷ்மீரில் 86.9 லட்சம் வாக்களார்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஜம்மு காஷ்மீரில் ஆய்வு நடத்திய பிறகு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல் தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். அதற்கான பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

    போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சமூக ஊடகப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

    மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாநில எல்லைகள் மற்றும் சர்வதேச எல்லைகள் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.

    ஜம்மு காஷ்மீரில் மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

    போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைவருக்கும் சமமான மற்றும் போதிய பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜம்மு காஷ்மீரில் 86.9 லட்சம் வாக்களார்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

    தேர்தல் பத்திர தரவுகள் நிச்சயம் குறித்த காலத்திற்குள் வெளியிடப்படும்.

    எப்போதும் வெளிப்படைத் தன்மைக்கு ஆதரவாகவே உள்ளோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஜாகர் கோட்லி அருகில் விபத்தில் சிக்கியது.
    • விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஜம்முவின் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஜம்முவின் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த பேருந்து பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பக்தர்களில் பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 50 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    அம்ரித்சரில் இருந்து கிளம்பிய பேருந்து, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஜாகர் கோட்லி எனும் இடத்தில் விபத்தில் சிக்கியது. இங்கிருந்து வைஷ்ணவ தேவி கோவில் இருக்கும் காத்ரா 15 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. வைஷ்ணவ தேவி பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கான ஆரம்ப பகுதி ஆகும்.

    விபத்து ஏற்பட்ட பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படை, காவல் துறை மற்றும் இதர மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதோடு விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில், ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.

    "பத்து பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பலத்த காயமுற்றனர். பேருந்து அம்ரித்சரில் இருந்து கிளம்பி காத்ராவுக்கு சென்று கொண்டிருந்த போது காஜர் கோட்லி அருகே பள்ளத்தாக்கில் விழுந்தது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஜம்முவின் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். 12 பேர் உள்ளூர் பொது சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்," என்று ஜம்முவின் துணை ஆணையர் அவ்னி லவசா தெரிவித்துள்ளார். 

    • மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி இந்த விபத்து திட்டமிட்ட ஒன்று என தெரவித்து இருந்தது.
    • போலி தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    ஜம்முவின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த சாலை விபத்தின் பின்னணியில் பயங்கரவாத அமைப்பு இருப்பதாக செய்தி வெளியாகி வந்தது. இந்த தகவலில் துளியும் உண்மையில்லை என்று ஜம்மு காஷ்மீர் காவல் நிலையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    காவல் துறை மூத்த துணை ஆய்வாளர் கலில் போஸ்வால் ஏழு பேரை பலிகொண்ட சம்பவம் சாலை விபத்து தான். ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்து ஏற்பட காரணம் என்று தெரிவித்தார். மிகவும் கடினமான வளைவில் செல்லும் போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் மலையில் இருந்து கீழே விழுந்தது.

    மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி சார்பில், இந்த விபத்து திட்டமிட்ட ஒன்று என தனது சமூக வலைதளத்தில் தெரவித்து இருந்தது.

    "தங்துருவில் ஏற்பட்ட சாலை விபத்தின் பின்னணியில் சட்டவிரோத பயங்கரவாத கும்பல் இருப்பதாக வெளியான செய்தி போலியானது ஆகும். அதில் எவ்வித உண்மையும் இருப்பதாக தெரியவில்லை. மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி வெளியிட்டு இருக்கும் அறிக்கையை மறுக்கிறோம். மக்கள் இதுபோன்று வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம்," என்று போஸ்வால் தெரிவித்தார்.

    இதுபோன்ற போலி தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    ×