என் மலர்
முகப்பு » slug 325292
நீங்கள் தேடியது "கிணற்றில் இளம்பெண் உடல் மீட்பு"
- உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 32). இவரது மனைவி ராஜகுமாரி(20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.
கடந்த 18-ந் தேதி ராஜகுமாரி வீட்டிலிருந்து மாயமானர். இதுகுறித்து அவரது கணவர் ஏழுமலை அளித்த புகாரின் பேரில் தெள்ளார் போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ராஜகுமாரியின் பிணமாக மிதந்து கிடப்பதாக தெள்ளார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த தெள்ளார் போலீசார், ராஜகுமாரி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரித்து வருகின்றனர்.
×
X