என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாத்தியம்"

    • 9-ம் நாள் விழாவான வசந்த உற்சவ திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • சிவ வாத்திய வாசிப்பிற்கு ஏற்ப சிறுவர்கள் உற்சாக நடனமாடினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்த மான வண்டமர்பூங்குழலாள் சமதே பிரமபுரீஸ்வரர் சுவாமி, தியாகராஜ சுவாமி கோவில் உள்ளது.

    பழமை வாய்ந்த இக்கோவிலில் பிரம்மோற்சவ வைகாசி பெருந்திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராத னைகள் மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வந்தது. இந்நிலையில் 9-ம் நாள் திருவிழாவான வசந்த உற்சவர் திருவிழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.

    ஏராளமான சிவ தொண்டர்கள் ஆரூரா தியாகேசா என்ற பக்தி முழக்கத்தோடு தியாகரா ஜரை சுமந்தபடி நடனமாடினர். பிரிங்க நடன கோலத்தில் தியாகராஜ சுவாமி

    கமலாம்பாளுடன் வசந்த மண்டபத்தில் சிவ வாத்தியங்கள் முழங்க எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சிவ வாத்திய வாசிப்பிற்கு ஏற்ப சிறுவர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தது பக்தர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    இதில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×