என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண்களுடன்"
- ஊட்டியில் நிலம் வாங்கிய அம்பலம்
- அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
நாகர்கோவில், மே.26-
நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் முதலிமார் தெரு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் கார்த்திக் (வயது 34). நகை மதிப்பீட்டாளர். இவரது மனைவி பார்வதி (23). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்கள் முதலிமார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த மாதம் 12-ந்தேதி மகேஷ் கார்த்திக் வேலை விஷயமாக சென்னை சென்றார். இதையடுத்து மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது மகேஷ் கார்த்திக் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டில் இருந்த 17 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அவர் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையன் வீட்டின் மாடி வழியாக புகுந்து பூட்டை உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றினார்கள். சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையன் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வாத்தியார்விளையை சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவது அறிந்த ஆனந்த் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆனந்திடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனந்த் கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மேலும் அந்த பணத்தை பெண்களுக்கு ஜாலியாக செலவு செய்துள்ளார். ஊட்டி பகுதியில் அவர் நிலம் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்