search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழையவழக்கு"

    • தகராறு ஏற்பட்டு அங்கு இருந்த மர சட்டத்தினால் பன்னீரை, குமார்கடுமையாக தாக்கி உள்ளார்.
    • பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கந்தன்பாளையத்தை சேர்ந்தவர் பன்னீர் (வயது 50).மீன் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற சிவகுமார்(38)ஆட்டோ டிரைவர். கடந்தாண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி குமார் மனைவி வீட்டு தோட்டத்தில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது யாரோ எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது.இதனால்தெருவில் நின்றுகொண்டுகு மார்திட்டிஉள்ளார் அப்போது அங்கு வந்த மீன் வியாரி பன்னீர் இதை தட்டி கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு அங்கு இருந்த மர சட்டத்தினால் பன்னீரை, குமார்கடுமையாக தாக்கி உள்ளார். படுகாயத்துடன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பன்னீர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் .இது குறித்து பண்ருட்டிபோலீசார் வழக்குப திவுசெய்துத லைம றைவான கொலையாளி குமாரை வலை வீசி தேடி வந்தனர்.

    இதற்கிடையில்நி லுவையில் உள்ள பழையவழக்குகளை துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பண்ருட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார் இதனை தொடர்ந்துபண்ருட்டி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர்தங்கேவல் போலீசார்ஆ னந்த்,ராஜி,கணேச மூர்த்திஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் இந்த வழக்கு விசாரணையை பல்வேறு கோணங்களில்நடத்தி தலைமறைவாக இருந்த கொலையாளி குமார் என்கின்ற சிவகுமாரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்

    ×