search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருக்க"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
    • தினசரி 35 லட்சம் லிட்டர் பால் பெற்று வினி யோகம் செய்யப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் பால்வ ளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். தமிழகத்தில் 9,673 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. 4 லட்சம் விவசாயிகளிடம் இருந்து தினசரி 35 லட்சம் லிட்டர் பால் பெற்று வினி யோகம் செய்யப்படுகிறது.

    தற்போது 45 லிட்டர் பால் கையாளும் வசதி உள்ளது. அதை இந்த ஆண்டு 70 லட்சமாக லிட்டராக உயர்த்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அமுல் நிறுவனம் வியாபார நோக்குடன் வருவதாகவும், அது ஆவினை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு மாநில பால் கூட்டுறவு சங்கங்களும் அவர்களது எல்லையை மீறாமல் செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் ஆவின் போல கேரளா, கர்நாடாவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படு கின்றன. தற்போது பால் உற்பத்தி பகுதி மீறல் வந்து விட கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.

    எனவே பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கலக்கம் அடைய வேண்டாம். தமிழகத்தில் 1 லட்சம் மாடுகளுக்கு தான் இன்சூ ரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனைத்து மாடுகளையும் இன்சூரன்ஸ் செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடக்கிறது.

    செயல்படாத பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை கண்டறிந்து அது செயல்படாததற்கான காரணத்தை அறிந்து மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அச்சப்பட வேண்டாம். பாதிப்பு ஏற்ப டும் என பயப்பட வேண் டாம்.

    பால் உற்பத்தி நிறுவ னங்கள் கூட்டுறவு சட்டப் படி பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் பால் உற்பத்தி பகுதியில் விதி மீறல் ஏற்பட கூடாது. தற்போது பால் உற்பத்தி பகுதியை மீறுகின்ற செயல் போல தெரிகிறது. எனவே தான் 2 விஷயங்களை கூறி முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

    ஆவினை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்றுமதி தேவை அதிகமாக உள்ளது. பால் உற்பத்தியை பெருக்க இந்த ஆண்டு 2 லட்சம் கறவை மாடுகள் கொடுக்கப்பட உள்ளன.

    ஆவினில் வே புரோட்டின் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் பொருட்களின் எண்ணிக்கை அதிகாரிக்கவும், சுவையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் மேய்ச்சல் நிலம் குறைவாக உள்ளது. மேய்ச்சல் நிலத்தை கண்டறிந்து மேம்படுத்தி பச்சை புல் தயாரிக்கும் திட்டம் கெண்டு வர ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியை பெருக்க என்ன நடவடிக்கை தேவை என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    அமுல் விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக பார்க்கவில்லை.

    பொதுவாக ஒரு மாநி லத்தில் செயல்படுகிற சங்கம் மற்றொரு மாநிலத்தில் தலையிடுவது இல்லை.

    அமுல் நிறுவனம் கொள் முதல் விலையை உயர்த்தி தருவதாக கூறுகிறார்கள். ஆனால் ஆவின் சார்பில் இன்ஸ்சூரன்ஸ் உள்பட பல்வேறு விஷயங்கள் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் பால் உற்பத்தி யாளர்களின் கோரிக்கை களை வருங்காலங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பால்வளத்துறை மூலம் மாடுகள் இனச்சேர்க் கைக்கு உயர்ரக மாடுகளின் விந்துவை சேகரித்து விந்து உறைவைப்பு நிலையம் முறையாக செயல்படுத் தப்பட்டு வருகிறது. நாட்டு இன மாடுகளில் தரமான மாடுகளை கண்டறிந்து அபிவிருத்தி செய்து இனப் பெருக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஓரிரு வாரங்களில் அனைத்து ஆவின் எந்தி ரங்களின் செயல்பாடுகளை ஆராய வேலை நடக்கிறது. அது முடிந்ததும் எந்த எந்திரங்களை மேம்படுத்த முடியும், மாற்றி அமைக்க முடியும் என்பது ஆராயப் படும். ஆவினில் பால் வாங்குவது பாதுகாப்பானது. ஆவின் தரத்துக்கு போட்டி யாக எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×