search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி கனமழை"

    • ஒரு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
    • இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாடு, கேரளா மற்றும் டெல்லி, உத்தர பிரதேசம், அரியானா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    டெல்லி என்சிஆர், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியின் வடமேற்கே உள்ள ஜஹாங்கீர்புரி பகுதியில் இன்று பிற்பகல் 2 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இடிபாடுகளுக்கு அடியில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தெரிவித்தனர்.

    மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புப்படை மற்றும் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குஜராத் மாநிலத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கனமழையால் இடிந்து விழுந்தது

    வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக நேற்று டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்தார். 8 பேர் காயமடைந்தனர்.

    இந்த சோகம் நீங்காத நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கனமழையால் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    இன்று குஜராத் மாநிலத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக டெல்லி முழுக்க தண்ணீர் குளம் போன்று தேங்கி நிற்கிறது. வாகனங்கள் நீரில் மூழ்கின.

     


    கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனைய மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனைய செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டன.


    இதேபோன்று டெல்லியை சுற்றியுள்ள ஜங்புறா, ஆர்.கே. ஆஷ்ரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.


    டெல்லியின் வசந்த விகார் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டிடத்தில் பணியாற்றிய பணியாளர்கள் அங்கிருந்த பள்ளத்தில் விழுந்தனர். இவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.  

    டெல்லி முழுக்க கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி விமான நிலையத்தில் முதலாவது முனையத்தின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
    • முக்கியமான சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் ஏராளனமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. டெல்லியில் கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த வெயிலில் இருந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனிடையே, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் முதலாவது முனையத்தின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் காயமடைந்தனர். முக்கியமான சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சாலையில்  தேங்கியுள்ள தண்ணீரில் பா.ஜ.க. கவுன்சிலர் ரவீந்தர் சிங் நேகி படகில் சென்ற சம்பவம் அரங்கேறியது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதை எடுத்துரைக்கும் வகையில், அவர் இவ்வாறு செய்துள்ளார். இதன் மூலம் டெல்லி அரசுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், அனைத்து வடிகால்களும் நிரம்பி வழிகின்றன. பருவமழைக்கு முன் வடிகால்களை தூர் வாராததால் தண்ணீர் தேங்கியுள்ளது. வினோத் நகர் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது என்றார்.

    • தீயணைப்பு துறையினர் விமான நிலையத்திற்கு விரைந்தனர்.
    • மேற்கூரை இடந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் காயம்.

    டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜூன் 27) காலை முதலே மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக டெல்லியில் ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழந்தது. இன்று காலை அரங்கேறிய இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விமான நிலையத்திற்கு விரைந்தனர்.


    மூன்று தீயணைப்பு துறை வாகனங்கள் விமான நிலையத்தை சென்றடைந்தன. முதற்கட்ட தகவல்களின் படி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் காயமுற்றனர். காயமுற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த சில வாரங்களாக டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், கனமழை காரணமாக அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.


    வாட்டி வதத்த வெயில் காரணமாக கடந்த சில வாரங்களாக தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி சிக்கியது. தற்போது டெல்லி முழுக்க கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. 

    • டெல்லியில் இன்று காலை பல்வேறு இடங்களில் மழை
    • கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியது

    தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவின் வடமாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை பெய்தததால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியான நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் மாயமானார்கள். அவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது.

    கடந்த மாதம் யமுனை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடியதால், டெல்லி நகருக்குள் மழை வெள்ளம் புகுந்தது. அதன்பின் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பியது.

    இந்த நிலையில் இன்று காலை பெய்த கனமழையால் பெரும்பாலன இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. பதார்புர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வெள்ளம் சாலையில் தேங்கியது. வசந்த் விஹார் பகுதியிலும் மழை வெள்ளம் சாலையில் ஓடியது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    • ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    • அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு டெல்லியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

    யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்நதுளள்து. டெல்லியில் சாலை எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, கான் மார்க்கெட், தீன் மூர்த்தி ரவுண்ட்-அபவுட், ஜிஜிஆர்-பிடிஆர், ஏ-பாயிண்ட் டு டபிள்யூ-பாயிண்ட், கம்லா எக்ஸ்பிரஸ் பில்டிங், ஆண்ட்ரூஸ் கஞ்ச், கான்பூர் டி-பாயின்ட், பைரன் மார்க் ரயில்வே பாலத்தின் கீழ் உள்ள வழித்தடம் உள்ளிட்ட சாலைகளில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்கும்படி போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இதற்கிடையே அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு டெல்லியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்லி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது.

    • டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.
    • மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் பலர் பலியாகி உள்ளனர்.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 153 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் பலர் பலியாகி உள்ளனர். டெல்லியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து 58 வயது நபர் உயிரிழந்தார்.

    மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மந்திரி அதிதி பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்நிலையில், தொடர் மழை காரணமாக டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

    • தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

    டெல்லியில் உள்ள சப்தர்ஜங் வானிலை மையத்தில் மதியம் 2.30 மணி வரை 98.7 மிமீ மழை பதிவாகியுள்ளது. ரிட்ஜ் மையத்தில் 111.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    மேலும் டெல்லி மற்றும் என்சிஆர், யமுனா நகர், குருக்ஷேத்ரா, கர்னால், அசாந்த், பானிபட், கோஹானா, கன்னார், மெஹம், சோனிபட், ரோஹ்தக், கார்கோடா, பிவானி, சர்க்கி தாத்ரி, மட்டன்ஹைல், ஜஜ்ஜார், கோஸ்ஸாவின் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமானங்களை அறிவிக்கப்பட்ட நேரத்தில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
    • அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலையில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. வாகன போக்குவரத்து வழக்கத்தைவிட மெதுவாகவே இருந்தது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக, விமானங்களை அறிவிக்கப்பட்ட நேரத்தில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

    பயணிகள் முன்பதிவு செய்துள்ள விமானங்களுக்கான பயண நேரம் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டு அறிந்துகொள்ளும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    டெல்லியில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 30ம் தேதிவரை வெப்ப அலை இருக்காது என கணித்துள்ளது.

    ×