என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சட்டைநாதர் கோவில்"
- பாரதியாரின் கனவினை பிரதமர் மோடி முன்னெடுத்து செல்கிறார்.
- தமிழகத்திற்கு உண்மையான, முழுமையான வளர்ச்சி என்ன என்பதை பாரத பிரதமர் மோடி செய்து காட்டுவார்.
சீர்காழி:
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
154-வது தொகுதியாக சீர்காழிக்கு நேற்றுவந்தார். பின்னர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது
2024-ல் மூன்றாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு யாத்திரையில் பங்கேற்றுள்ளீர்கள். திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார், நந்தனார் போன்ற மகான்கள் பிறந்த ஊரில் மகான்களின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு வந்துள்ளேன். நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த ஊர். சுதந்திர தாகம் தீட்டிய நீலகண்டபிரம்மச்சாரிக்கு ஒரு வேளை சாப்பிட உணவு இல்லை என பாரதியாரிடம் உணவுகேட்டார்.
அப்போது முண்டாசு கவிஞர் பாரதியார் தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என நீலகண்டபிரம்மச்சாரிக்காக பாடலை பாடினார். பாரதியாரின் கனவினை பிரதமர் மோடி முன்னெடுத்து செல்கிறார்.
சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோவில் வளாகத்தில் ஐம்பொன் சிலைகள், தமிழகத்தின் அரிதான 410, தேவார செப்பேடுகள் கிடைக்கப் பெற்றது. தமிழகத்தின் பாரம்பரிய சின்னங்கள். இவைகள் காலத்தின் பொக்கிஷம். கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், தேவார செப்பேடுகள் ஆகியவற்றை ஸ்ரீ சட்டை நாதர் திருக்கோவிலுக்கு உள்ளேயே தான் வைக்க வேண்டும். தவிர மியூசியத்தில் இருக்க கூடாது.
மயிலாடுதுறையை சுற்றிலும் நவகிரக கோவில்கள், சைவ வைணவ தளங்கள் ஆன்மீகவாதிகள் குடியிருக்க கூடிய எம்பி தொகுதியாக உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வரும் தேர்தலில் பா.ஜனதா வெற்றி வாய்ப்பு கொடுத்தால் இந்தியாவின் ஆன்மீக தலங்களாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணத்தை மாற்றி காட்டுவோம். தமிழகத்திற்கு உண்மையான, முழுமையான வளர்ச்சி என்ன என்பதை பாரத பிரதமர் மோடி செய்து காட்டுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சட்டைநாதர் கோவிலில் திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரருடன் அருள் பாலித்து வருகிறார்.
- தாலி சரடு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து யாகசாலை அருகில் வைத்தனர்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரருடன் அருள் பாலித்து வருகிறார்.
இந்த கோவிலில் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது.
இந்நிலையில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 24-ந் தேதி சீர்காழி சட்டைநாதர் கோவிலில் குடமுழுக்கு நடந்தது.
விழாவை முன்னிட்டு திருநிலை நாயகி பிரம்மபுரீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு பெண்கள் ஏராளமான பூக்கள், பழங்கள், தாலி சரடு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து யாகசாலை அருகில் வைத்தனர்.
அங்கு திருநிலை நாயகி பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தருமபுரம் ஆதீனம்முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்