என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எஸ்.என்.எல். ஊழியர்"

    • தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டு உடல் மிதப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
    • இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள ஒலகடம், எட்டிக்குட்டை பாலக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (57). இவர் பி.எஸ்.என்.எல். டி.டி.ஆக பணியாற்றி தற்போது விருப்ப ஓய்வு பெற்று மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் ரங்கசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில் அந்த தொழிலில் மிகுந்த நஷ்டம் காரணமாக கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த சில நாட்களாக மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது மனைவியிடம் வெளியே சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றார். பின்னர் இரவு வரை ரங்கசாமி வீட்டிற்கு வராததால் அவரை உறவினர்கள் மற்றும் மகன் சந்தோஷ் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    அப்போது குட்ட முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் சந்தோசுக்கு போன் செய்து ரங்கசாமி தந்தை பவானி அருகில் உள்ள ஜீவா நகரையொட்டி காவிரி ஆற்றில் உடைகளை ஒரு பாறையில் வைத்து விட்டு தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டு உடல் மிதப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து சந்தோஷ் பவானி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவயிடம் சென்று காவிரி ஆற்றில் பிணமாக மிதந்த ரங்கசாமி உடலை மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×