என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சலவை தொட்டி"
- கமுதி சுந்தரபுரம் ஊரணி பகுதியில் நவாஸ்கனி எம்.பி. சலவை தொட்டிகள் நிதி வழங்கினார்.
- ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் வசதிக்காக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை அவர் திறந்து வைத்தார்.
பசும்பொன்
கமுதி-சுந்தரபுரம் பகுதியில், ஏராளமான சலவைத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வண்ணாந்துறையில் சலவைத்தொட்டி வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இவர்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சலவைத் தொட்டிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதன்படி சலவைத்தொட்டி கட்டிமுடிக்கப்பட்டு நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தன. இதன் தொடக்க விழாவில் நவாஸ்கனி எம்.பி., கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல்வஹாப் சகாராணி, கமுதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், சுந்தரபுரம் ஜமாத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதே போல் கீழராமநதி கிராமத்தில் நவாஸ்கனி எம்பி தனது நிதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் வசதிக்காக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை அவர் திறந்து வைத்தார். இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்விபோஸ் மற்றும் கிராம பொது மக்கள் இதில் கலந்து கொண்டனர்.