search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய மருத்துவ கவுன்சில்"

    • தற்போதுவரை கொள்குறி வகை வினாக்கள் (MCQ) அடங்கிய வினாத்தாள் அளிக்கப்பட்டு, விடைகளை ஓ.எம்.ஆர் (OMR) தாளில் கலர் செய்யும் முறை இருந்து வருகிறது
    • தேசிய மருத்துவ கவுன்சில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகள் கணினி மூலம் நடத்தப்படும்.

    இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமையால் இந்த வருடம் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததாககுற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் சமூக அமைப்புகளும் வீதிக்கு வந்து போராட்டங்ககளை முன்னெடுத்தது அரசுக்கு பெரும் தலவிவழியாக மாறியது. இதனைத்தொடர்ந்து 1000 துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது.

     

    வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்ட குற்றாலிக் குமபல்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தவழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது. இந்நிலையில் நீட் முறைகேடு விவகாரம் அரசியலிலும் பூதாகரமாக மாறியுள்ளது.நடந்து வரும் பாராளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் நீட் முறைகேடு பிரச்சனையை தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி வருகின்றன.

     

    இதற்கிடையில் கடந்த ஜூன் 22 , தேர்வு நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்கவும், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்யவும் முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில்தான் அடுத்த வருடம் முதல் நீட் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போதுவரை கொள்குறி வகை வினாக்கள் (MCQ) அடங்கிய வினாத்தாள் அளிக்கப்பட்டு, விடைகளை ஓ.எம்.ஆர் (OMR) தாளில் கலர் செய்யும் முறை இருந்து வருகிறது. எனவே தற்போது பொறியியல் நுழைவுத்தேர்வுகளான ஜேஇஇ தேர்வுகள் கணினி மூலம் தேசிய தேர்வு முகாமையால் நடத்தப்படுவதை போல நீட் தேர்வுகளையும் அடுத்த வருடம் முதல் நடந்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தேசிய மருத்துவ கவுன்சில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகள் கணினி மூலம் நடத்தப்படும்.  

    • மத்திய அரசு மருந்து சந்தைப்படுத்துதல் நடைமுறைகளுக்கான புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
    • ஒரு டாக்டரை அணுகுவதற்கு பணம் சார்ந்த எந்தவொரு பலனையும் வழங்கக்கூடாது என மத்திய அரசு தெரிவித்தது.

    புதுடெல்லி:

    டாக்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் இலவச பரிசுகள் மற்றும் பயண வசதிகளை வழங்குவதற்கு தடைவிதிக்கும் வகையில் மருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கான சீரான விதிமுறையை தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது. இனி மருந்து நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய விவரங்கள் வருமாறு:

    டாக்டர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் மற்றும் ஏஜென்ட்கள் பரிசுகள் வழங்கக் கூடாது.

    ஒரு டாக்டரை அணுகுவதற்கு அவர்களுக்கு பணம் சார்ந்த எந்தவொரு பலனையும் வழங்கக் கூடாது.


    மருந்துகளைப் பரிந்துரைக்க தகுதி இல்லாதவர்களுக்கு இலவச மாதிரிகள் வழங்கக் கூடாது.

    தங்கும் விடுதி, ஓய்வு விடுதி, விலை உயர்ந்த உணவு போன்ற எந்தவொரு விருந்தோம்பலையும் வழங்கக் கூடாது.

    கருத்தரங்கம், மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்கு உள்நாட்டு அல்லது வெளிநாடுகளுக்கான பயண வசதிகளை வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2014-ம் ஆண்டுக்கு முன்பு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 387 ஆக இருந்தது.
    • மருத்துவ படிப்புக்கான எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 348-இல் இருந்து 99 ஆயிரத்து 763 ஆக அதிகரிப்பு.

    இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேசிய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுதவிர தமிழ் நாடு, குஜராத், அசாம், பஞ்சாப், ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் செயல்பட்டு வரும் சுமார் 100-க்கும் அதிக மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.

    2014-ம் ஆண்டுக்கு முன்பு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 387 ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 654 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவர் மாநிலங்களவையில் தெரிவித்தார். இதே போன்று 2014-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 348-இல் இருந்து தற்போது 99 ஆயிரத்து 763 ஆக அதிகரித்து இருக்கிறது.

    மருத்துவ மேற்படிப்புக்கான சீட்களின் எண்ணிக்கை 2014-இல் 31 ஆயிரத்து 185-இல் இருந்து தற்போது ரூ. 64 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் மருத்துவ கல்லூரிகள் மற்றும் எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்து இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து மருத்துவ துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறும் போது,

    'தேசிய மருத்துவ கவுன்சில் ஆதார் சார்ந்த பயோமெட்ரிக் முறையிலான வருகை பதிவேட்டை சார்ந்து இருக்கிறது. ஆனால் மருத்துவர்களின் பணி நேரம் நிர்ணயிக்கப்படாத சூழலே நிலவுகிறது. அவர்கள் இரவு நேரம் மற்றும் அவசர காலங்களிலும் பணியாற்ற வேண்டும். இதனால் தேசிய மருத்துவ கவுன்சில், பணி நேரத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி வருகிறது. மருத்துவ கல்லூரிகளின் நிர்வாகம் நடைமுறைக்கு உகந்ததாக இல்லை, இதனால் தேசிய மருத்துவ கவுன்சில் இதனை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது,' என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து மற்றொரு வல்லுனர் கூறும் போது, 'மருத்துவ கல்லூரிகளில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தாலேயே தேசிய மருத்துவ கவுன்சில் அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்து வருகிறது. இதுதவிர இதுபோன்ற கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இது முற்றிலும் முரணாக இருக்கிறது. இது உலகளவில் நாட்டின் நற்பெயரை பாதித்து விடும். உலகளவில் அதிக மருத்துவர்களை உருவாக்கும் நாடு இந்தியா. இது போன்ற சம்பவங்கள் வெளியுலகிற்கு வரும் போது, இந்திய மருத்துவர்கள் மீதான நம்பிக்கை உலகளவில் பாதிக்கப்பட்டு விடும்,' என்றார்.

    • 5 பேர் கொண்ட குழுவினர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தனர்.
    • அடுத்த கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பது தொடர்பாக இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தனர். 500 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை சேவையை தொடங்கியுள்ளது.

    இந்தநிலையில் தேசிய மருத்துவ கவுன்சிலில் இருந்து 5 பேர் கொண்ட குழுவினர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தனர். அடுத்த கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பது தொடர்பாக இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அரசு மருத்துவக்கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் விதம், ஆய்வகம், போதுமான டாக்டர்கள் உள்ளார்களா, மருத்துவபடிப்பு மாணவர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கான வசதிகள், சிகிச்சை அளிக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து மாலை வரை ஆய்வு செய்தார்கள். அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ஆய்வு குறித்து டீன் முருகேசன் கூறும்போது, அரசு மருத்துவக்கல்லூரிக்கு வரும் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் வழங்குவதற்கு முன் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்து, திருப்தி அளிக்கும்பட்சத்தில் அங்கீகாரத்தை புதுப்பித்து வழங்குவார்கள். நமது கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்து ஏற்கனவே தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு அறிக்கை அனுப்பி விட்டோம். 5 பேர் கொண்ட குழுவினர் வந்து ஆய்வு செய்துள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். விதிமுறைக்கு உட்பட்டு நாங்கள் திருப்தியாக செய்துள்ளோம். குழு ஆய்வுக்கு பிறகு திருப்தி அளிக்கும்பட்சத்தில் அங்கீகாரம் கிடைக்கும்' என்றார்.

    ×