என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எள்"
- சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 799-க்கு விற்பனையானது.
சிவகிரி:
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொண்ட 2 ஆயிரத்து 923 கிலோ எடையுள்ள எள் விற்பனையானது.
விற்பனையான எள்ளில் சிவப்பு ரக எள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.130.59 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.169.39 காசுகள், சராசரி விலையாக ரூ.161.99 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 799-க்கு விற்பனையானது.
இதேபோல அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 166 மூட்டைகள் கொண்ட 7 ஆயிரத்து 591 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.
விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.85.69 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.86.88 காசுகள், சராசரி விலையாக ரூ.86.5 காசுகள் என்ற விலைகளிலும்,
2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலை யாக ரூ.63.69 காசுகள், அதிக பட்ச விலையாக ரூ.82.89 காசுகள், சராசரி விலையாக ரூ.72.90 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 792-க்கு விற்பனையானது.
மொத்தம் சிவகிரி மற்றும் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் எள் மற்றும் தேங்காய்பருப்பு சேர்த்து ரூ.10 லட்சத்து 39 ஆயிரத்து 591-க்கு விற்பனையானது.
- ரூ. 9.63 லட்சத்துக்கு எள் விற்பனை நடந்தது
- இதில், கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 128.69-க்கு விற்பனையானது
ஈரோடு,
மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 83 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 128.69-க்கும், அதிகபட்சமாக ரூ. 156.89-க்கும், சராசரி விலையாக ரூ.141.69-க்கும் விற்பனையானது.இதேபோல, சிவப்பு ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.116.39-க்கும், அதிகபட்சமாக ரூ.153.69-க்கும், சராசரி விலையாக ரூ. 135.10-க்கும் விற்பனையானது. வெள்ளை ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.143.19-க்கும், அதிகபட்சமாக ரூ.180.59-க்கும், சராசரி விலையாக ரூ.163.70-க்கும் விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 191 கிலோ எடையிலான எள் ரூ. 9 லட்சத்து 63 ஆயிரத்து 487க்கு விற்பனையானதாக விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- கறுப்பு எள்ளை பயன்படுத்தும்போது பித்ருக்கள் முழு மனத்திருப்தி அடைகிறார்கள் என்பது ஐதீகமாகும்.
- தர்ப்பையில் படும் தர்ப்பணங்களை ஸ்வதாதேவி எடுத்து செல்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பித்ருக்கள் வழிபாட்டில் முக்கியப்பங்கு வகிப்பது கறுப்பு எள்ளும், புனிதம் நிறைந்த தர்ப்பை புல்லும்தான்.
இந்த இரண்டுமே மிக, மிக உயர்ந்த சக்தி கொண்டது.
எள் என்பது மகா விஷ்ணுவின் மேனி வியர்வையில் இருந்து தோன்றியதாகும். தர்ப்பணம், சிராத்தம் செய்யும்போது கறுப்பு எள்ளை பயன்படுத்தும்போது பித்ருக்கள் முழு மனத்திருப்தி அடைகிறார்கள் என்பது ஐதீகமாகும்.
தர்ப்பைப்புல் ஆகாயத்தில் இருந்து தோன்றிய தாவரமாகும். இதன் சக்தியையும் சிறப்பையும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் மேலை நாட்டவர்கள் உணர்ந்தனர். ஆனால் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தர்ப்பைப்புல்லுக்கு, பூஜைகளில் முதன்மை இடம் கொடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.
தர்ப்பைப்புல்லின் இரு பக்கங்களில் பிரம்மன், சிவன் நடுவில் விஷ்ணு உள்ளனர். இதனால் தர்ப்பைப்புல்லுக்கு மந்திர சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை அதிகமாகும்.
இந்த தர்ப்பையை மிகவும் சாதாரணமாக அது வெறும் புல்தானே என்று நினைக்கிறார்கள். ஆனால் அந்த புல் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு உதாரணத்தைப்பாருங்கள்.
உங்களாலோ அல்லது உங்கள் முன்னோர்களாலோ கர்ம வினைகள் ஏற்பட்டுஇருக்கலாம். இந்த கர்ம வினை உங்களை பாதிக்காத வகையில் தடுக்கும் ஆற்றல் தர்ப்பைப்புல்லுக்கு உண்டு. அது மட்டுமல்ல உங்கள் மனதை அலைக்கழிக்கும் தீய எண்ணங்களை வர விடாமல் தடுக்கும் சக்தியும் தர்ப்பைக்கு இருக்கிறது.
நாம் பித்ருக்களுக்கு தர்ப்பணம், பூஜைகள் செய்யும்போது நம் கண்களுக்குத்தெரியாத ஒளி வடிவில் வரும் நம் மூதாதையர்கள் நம் முன்பு வைக்கப்பட்டிருக்கும் தர்ப்பை புல்கள் மீதுதான் அமர்வார்களாம். எனவேதான் தர்ப்பை புல்லை தொடும்போது மட்டும் மனசீகமாக நம் முன்னோர்களை வணங்கிவிட்டே தொட வேண்டும் என்கிறார்கள்.
அது மட்டுமல்ல பித்ருக்களுக்கு நாம் கொடுக்கும் நீர், தர்ப்பணங்கள் அவர்களுக்கு நேரடியாக சென்று சேரவும் தர்ப்பைப்புல்லே உதவியாக உள்ளது. தர்ப்பையில் படும் தர்ப்பணங்களை ஸ்வதாதேவி எடுத்து செல்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
மிகவும் பரிசுத்தமான தர்ப்பைப்புல்லுக்கு கிரகணகதிர் வீச்சுகளை தடுக்கும் மாபெரும் சக்தியும் இருக்கிறது. எனவே கிரகண காலங்களில் தண்ணீர், பால், நெய், போன்றவற்றில் தர்ப்பைப்புல்லை நம் முன்னோர்கள் போட்டு வைத்ததை நீங்கள் பார்த்திருக்கலாம்.
சிலர் ஒரு தடவை பயன்படுத்திய தர்ப்பைப்புல்லை மீண்டும் பயன்படுத்தலாமா என்று சந்தேகப்படுவதுண்டு. தர்ப்பையை மீண்டும், மீண்டும் எத்தனை தடவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஏனெனில் தர்ப்பைக்கு எந்தவித தோஷமும் கிடையாது.
கருட புராணத்தில் இது பற்றி விளக்கம் அளித்த மகா விஷ்ணு, தர்ப்பையை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.
தர்ப்பைக்கு சூசைபுல் என்றொரு பெயரும் உண்டு. ஒருவர் மரணம் அடையும் தருவாயில் கையில் தர்ப்பைப்புல் வைத்திருந்தால் உன்னத நிலையை அடைவார் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த அளவுக்கு தர்ப்பைப்புல் உயர்வானது.
எனவே இனி பித்ருக்களுக்கு பூஜை, தர்ப்பணம் செய்யும்போது தர்ப்பைப்புல்லிடம் மட்டும் சற்று பயபக்தியுடன் இருங்கள்.
- முத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் எள் அறுவடை நடைபெற்று வருகிறது.
- சனிக்கிழமையன்று தேங்காய், கொப்பரை ஏல விற்பனை நடத்தப்படுகிறது.
காங்கயம் :
முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூன் 3-ந் தேதிமுதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் எள் மறைமுக ஏலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா் தங்கவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- முத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது எள் அறுவடை நடைபெற்று வருகிறது. அருகிலுள்ள மூலனூா், வெள்ளக்கோவில், கொடுமுடி, சிவகிரி ஆகிய பகுதிகளிலும் பல விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனா். முத்தூா் விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமையன்று தேங்காய், கொப்பரை ஏல விற்பனை நடத்தப்படுகிறது. இத்துடன் எள் விற்பனையும் நடத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து வணிகா்கள், உயரதிகாரிகளுடன் கலந்து பேசி நடப்பு எள் அறுவடைப்பருவம் முடியும் வரை ஜூன் 3 -ந் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் முத்தூா் விற்பனைக்கூடத்தில் எள் மறைமுக ஏலம் நடத்தப்படும். இதில் எள் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்