search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்ரூத் திட்டம்"

    • குளச்சல் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்
    • அனுமதி வாங்கும் முன்பு வீடுகளை கட்டி உள்ளனர். அதற்கு எப்படி? அனுமதி அளிக்க முடியும்? என்றார்

    குளச்சல் :

    குளச்சல் நகர்மன்ற கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. ஆணையாளர் செந்தில்கு மார், மேலாளர் ஜெயன், துணை தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், நகராட்சி பொறியாளர் மணி, சுகா தார அலுவலர் ஸ்டான்லி குமார், நகரமைப்பு அலு வலர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சில் ஜாண்சன் (தி.மு.க.) பேசுகை யில், நகராட்சி பகுதியில் புல் பூண்டுகள் வெட்டப்ப டாமல் உள்ளது என்றார்.

    பனிக்குருசு (தி.மு.க.), எனது வார்டில் சாலை சேதமடைந்து பல மாதங்கள் ஆகிறது. சாலை நடுவே உள்ள மின் கம்பத்தையும் மாற்ற வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த தலைவர், மின் கம்பத்தை மாற்ற மின் வாரியத்திற்கு பணம் செலுத்த வேண்டும். முதலில் நகராட்சி வைத்துள்ள பாக்கி பணத்தை செலுத்த சொல்கி றார்கள்.

    ரகீம் (தி.மு.க.), நம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களை விடவும் மேஸ்திரிகள் அதிகம் பேர் உள்ளனர். நகர சுகாதாரம் பேண வேண்டும். அதனால் தேவையான துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார். அன்வர் சதாத், பணியா ளர்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என கூறி னார்.

    ரமேஷ் (காங்கிரஸ்), வீடு கட்ட அனுமதி கோரும் விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளது என்றார். இதற்கு நகரமைப்பு ஆய்வாளர், அனுமதி வாங்கும் முன்பு வீடுகளை கட்டி உள்ளனர். அதற்கு எப்படி? அனுமதி அளிக்க முடியும்? என்றார்.

    ஷீலா ஜெயந்தி (தி.மு.க.), சாஸ்தான்கரை டிப்போ மேற்கு சாலைக்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜேசையா பெயரை சூட்ட வேண்டும் என்றார்.

    ஜாண்சன், புதிய சிறுவர் பூங்காவிற்கு காயிதே மில்லத் பெயரை சூட்ட வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து பேசிய

    தலைவர், கடிதம் அனுப்பி உள்ளோம். பதில் வந்ததும் பெயரை சூட்டலாம் என்றார்.

    ரகீம், நகராட்சி வீடு களிலிருந்து கழிவுநீர் வெளியேறும் குழாய்களை அடைக்கக்கூடாது என கவுன்சிலர்கள் கொடுத்த பொருள் அஜெண்டாவில் சேர்க்கப்பட்டுள்ளது. இது செயல் வடிவம் காண வேண்டும். கழிவுநீர் குழாய் களை அடைத்து பொது மக்களுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது.

    ஜாண் பிரிட்டோ (தி.மு.க.), களிமார் மருத்துவ மனையிலிருந்து வெளி யேறும் கழிவுநீர் வாய்க்கா லில் கலக்கிறது. மேலும் வணிக வளாக கட்டிடங்கள், அரசு அலுவலக கட்டிடங்க ளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீரும் மழை நீர் வடிகாலில் கலக்கிறது.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    தொடர்ந்து புல் புதர்கள் வளர்ந்து, பாசிகள் படர்ந்து துர்நாற்றமடிக்கும் வெள்ளியாகுளத்தை அம்ரூத் திட்டத்தில் சுத்தம் செய்து பராமரிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது.
    • இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூர் பனியன் தொழிலை நம்பியுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்களும், தொழில் நிமித்தமாக இங்கு வந்து செல்கின்றனர். இருப்பினும், கட்டமைப்பு வசதிகளில் சற்று பின்தங்கியுள்ளது.தற்போது வேகமாக வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

    இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூர் பனியன் தொழிலை நம்பியுள்ளனர். திருப்பூர், பல்லடம், அவிநாசி சுற்றுப்பகுதியில் மட்டும் 1.60 லட்சத்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர்.

    வடமாநில தொழிலாளர்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் ரெயில்கள் வழியாக வந்து செல்கின்றனர். அத்துடன் ஆயிரக்கணக்கான பயணிகள், தினமும் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இருப்பினும் கோவை, ஈரோடு ரெயில்வே சந்திப்புகளுடன் ஒப்பிடுகையில் திருப்பூர் ரெயில் நிலையம் வசதிகளில் பின்தங்கியுள்ளது.மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில் திருப்பூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்திட ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன. விரைவில் முழுமையாக ஆலோசித்து மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் தொழில் அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:- திருப்பூர் ரெயில் நிலையம் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில் மேம்படுத்தப்படுமென தெரிவித்துள்ளனர். தெற்கு பகுதியில் உள்ளது போலவே வடக்கு பகுதியிலும், இரு சக்கர வாகன நிறுத்தம், டிக்கெட் கவுன்டர், புக்கிங் சென்டர் போன்ற வசதிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ெரயில்வே பயணிகளுக்கு கூடுதல் வசதிகளும் செய்து கொடுக்கப்படும். ரெயில்வே சந்திப்பில் உள்ள அனைத்து வசதிகளும் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு கிடைக்கும். அம்ரூத் திட்டத்தில் ரெயில் நிலையம் மேம்பாடு செய்வது தொடர்பாக விரைவில் தொழில் அமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

    ×