search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர்கள்"

    • ஜார்கண்ட் கவர்னராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன், தற்போது மகாராஷ்டிராவின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை.

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புதிய ஆளுநர்களை நியமித்தார்.

    ஜார்கண்ட் கவர்னராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன், தற்போது மகாராஷ்டிராவின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூரில் இருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னாள் தமிழக பாஜக தலைவர் ஆவார்.

    பரேலி தொகுதியில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்ற பாஜக மூத்த தலைவர் சந்தோஷ் கங்வார் ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் இவருக்கு போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சத்தீஸ்கர் மாநில கவர்னராக அசாம் மாநிலத்தின் முன்னாள் எம்.பி. ராமன் தேகா நியமிக்கப்பட்டுள்ளார்.

    மகாராஷ்டிர மாநில சட்டசபையின் முன்னாள் சபாநாயகரும் பாஜக தலைவருமான ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா கவர்னராக பாஜகவை சேர்ந்த திரிபுராவின் முன்னாள் துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

    ராஜஸ்தானின் மூத்த பாஜக தலைவரும், மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினருமான ஓம் பிரகாஷ் மாத்தூர் சிக்கிம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பாஜகவை சேர்ந்த கர்நாடகாவின் முன்னாள் எம்.பி. விஜய்சங்கர் மேகாலயா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி ஸ்ரீ பன்வாரிலால் புரோஹித்தின் ராஜினாமாவை இந்திய குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

    அசாம் மாநில கவர்னராக இருந்த குலாப் சந்த் கட்டாரியா, தற்போது பஞ்சாப் மாநில கவர்னராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக மூத்த தலைவரான கட்டாரியா இதற்கு முன்பு ராஜஸ்தானில் அமைச்சராக இருந்தவர்.

    சிக்கிம் கவர்னராக இருந்த லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, தற்போது அசாம் கவர்னராக நியமிக்கப்பட்டு, மணிப்பூர் கவர்னராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. பாஜக தலைவரான ஆச்சார்யா உத்தரப் பிரதேசத்தில் எம்எல்சியாக இருந்தவர்.

    குஜராத்தில் 2013 முதல் 2014 வரை அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.கைலாஷ்நாதன் புதுச்சேரியின் லெப்டினன்ட் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழக கவர்னராக உள்ள ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவு பெறும் நிலையில், இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை

    புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர்கள்

    மகாராஷ்டிரா - சி.பி.ராதாகிருஷ்ணன்

    புதுச்சேரி - கே.கைலாஷ்நாதன்,

    ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ்

    ராஜஸ்தான் - ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே,

    மராட்டிய பேரவை முன்னாள் சபாநாயகர்

    பஞ்சாப் - குலாம் சந்த் கட்டாரியா

    ஜார்க்கண்ட் - சந்தோஷ் கன்வார்

    சத்தீஸ்கர் - ராமன் தேகா

    மேகாலயா - விஜயசங்கர்

    தெலங்கானா - ஜிஷ்னு தேவ் சர்மா

    சிக்கிம் - ஓம் பிரகாஷ் மாத்தூர்

    அசாம் - லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா

    (மணிப்பூர் - கூடுதல் பொறுப்பு)

    • 164 அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
    • சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

    சென்னை:

    அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சென்னை ராணி மேரி கல்லூரி மற்றும் மாநில கல்லூரியில் நடக்கும் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று பார்வையிட்டார்.

    அவருடன் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், கல்லூரி கல்வி இயக்குனர் கீதா ஆகியோரும் உடன் இருந்தனர்.

    பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    164 அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் இருக்கின்றன. தற்போது சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு தொடங்கி உள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வில் 643 மாணவ-மாணவிகள் தமிழ்நாடு முழுவதும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல், விரும்பிய இடங்களில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். நாளை (வியாழக்கிழமை) முதல் பொது கலந்தாய்வு தொடங்க இருக்கிறது.

    கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு 15 சதவீதம் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசு கல்லூரிகளில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு இலவச விடுதி, கல்லூரி கட்டணம் என்று அறிவித்ததன் அடிப்படையில் ஆர்வமுடன் பலர் சேருகிறார்கள். அதேபோல், புதுமை பெண் திட்டம் அறிவிக்கப்பட்டதாலும், மாணவிகளின் விண்ணப்பப்பதிவு, சேர்க்கை அதிகரித்துள்ளது.

    கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தால் மட்டும் போதாது. கல்வித்தரமும் உயர வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். மாணவர்களின் திறமையையும், தகுதியையும் வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதுதான் நான் முதல்வன் திட்டம்.

    சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதன்படி, அங்குள்ள பேராசிரியர்கள், மாணவர்களும், இங்குள்ளவர்களும் அங்கே சென்று கல்வித்தரத்தை அறிந்து கொள்ள முடியும். வேலைவாய்ப்பு பயிற்சிகளை கொடுக்கவும் இயலும். வரும் காலங்களில் உயர்கல்வித்துறை மாணவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படுகிற துறையாக மாறும்.

    மாணவர் சேர்க்கையை போல, கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. அந்த வழக்கு முடிந்ததும், ஜூன் முதல் வாரத்தில் அதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படும்.

    எல்லா பல்கலைக்கழகங்களிலும் மொழி பாடங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறோம். அதுதொடர்பாகவும், மாநில கல்வி கொள்கை குறித்து விவாதிக்கவும் துணைவேந்தர்கள், மண்டல இணை இயக்குனர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

    கவர்னர் துணைவேந்தர்கள் மாநாட்டை 5-ந்தேதி நடத்துகிறார். அதில் கலந்துகொள்வது என்பது துணைவேந்தர்களுடைய தனிப்பட்ட விருப்பம். மாநிலங்கள் மாநில கல்விக்கொள்கையை வகுப்பதற்கு முன்னுரிமை உண்டு. தமிழ்நாட்டை போல, கர்நாடகாவிலும் மாநில கல்வி கொள்கை வகுக்கப்பட உள்ளது. இதில் கவர்னர்கள் கட்டுப்பாட்டோடு இருப்பது நல்லது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×