search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோபுர தரிசனம்"

    • இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.
    • கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.

    பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு.

    அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.

    திரு அண்ணாமலையார் கோவிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது.

    கோவிலுக்கு உள்ளே பேய் கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது.

    அடி முடி காணாத பரம்பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட

    கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய

    இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம்.

    அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது.

    கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.

    பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன.

    மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது.

    தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம்.

    திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.

    அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர்,

    குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள்,

    இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன்,

    கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி,

    சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.

    • கோவிலில் வருடந்தோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் "ஓம் நமசிவாய ஓம் நமசிவாய" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பாடல் பெற்ற ஸ்தலமாக பாடலீஸ்வரர் கோவில் இருந்து வருகின்றது. இக்கோவிலில் வருடந்தோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த 25 ந்தேதி கொடியேற்றத்துடன் வைகாசி பிரமோற்சவ விழா விமர்சியாக தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினந்தோறும் சாமி காலை மற்றும் மாலையில் வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. பின்னர் அதிகாரநந்தி கோபுர தரிசனம், மற்றும் நேற்று முன்தினம் மகாமேரு தெருவடைச்சான் விழா விமர்சையாக நடைபெற்றது. இன்று 7-ம் நாள் திருவிழாவின் போது தாயாருடன் பாடலீஸ்வரர் கைலாச வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் கோவில் முன்பு எழுந்தருளி கோபுர தரிசனம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று இரவு சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் வெள்ளி ரிஷப வீதி உலாவும் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 2 ந்தேதி 9-ம் நாள் திருவிழாவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெறும். இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் பாடலீஸ்வரர் எழுந்தருளி கோவில் வளாகத்திலிருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, திருத்தேரில் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சி அளித்து எழுந்த ருளுகிறார்.

    பின்னர் அங்கு திரண்டி ருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் "ஓம் நமசிவாய ஓம் நமசிவாய" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய மாடவீதியில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைய உள்ளது. அப்போது வரதராஜபெருமாள் கோவில் சார்பாக பட்டு மற்றும் மாலை சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரவு தேரிலிருந்து மண்டகப்படி பூஜை மற்றும் பஞ்சமூர்த்திகள் கோவில் வந்தடைய உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பூஜைக்கான ஏற்பாடுகள் நாகராஜ் குருக்கள் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

    ×