என் மலர்
நீங்கள் தேடியது "மழை மேலாண்மை அமைப்பு"
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தப் பணிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
- மழையால் ஏற்படும் ஈரத்தை துரிதமாக உலரச் செய்ய நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தாதது குறித்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.
அகமதாபாத்:
நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் போது மழை பெய்ததால் மைதானத்தில் நீர் சூழ்ந்தது.
மழையால் பிரதான ஆடுகளத்தின் பக்கத்தில் இருந்த இரண்டு பயிற்சி ஆடுகளங்கள் மழையால் ஈரப்பதத்துடன் இருந்தது. தொடர்ந்து அதை உலர செய்யும் பணிகளை மைதான பராமரிப்பு ஊழியர்கள் மேற்கொண்டனர். சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை இந்தப் பணி நீடித்தது.
ஸ்பாஞ்ச் கொண்டு நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தது. அதோடு உலரச் செய்யும் பணிக்கு மணல் தூவப்பட்டது. மேலும் அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர் போன்றவையும் பயன்படுத்தப்பட்டது.
இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்தப் பணிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்தனர். மழையால் ஏற்படும் ஈரத்தை துரிதமாக உலரச் செய்ய நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தாதது குறித்தும் சாடி இருந்தனர்.
இந்நிலையில் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்குவதற்குள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இருப்பது போல முழு ஆடுகத்தையும் மூடக்கூடிய அளவுக்கு கவர் வசதியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும் என குஜராத் கிரிக்கெட் வாரியத்திற்கு, பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சேஹாஷிஷ் கங்குலி வலியுறுத்தி உள்ளார்.