என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இங்கிலாந்து அயர்லாந்து தொடர்"
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 524 ரன்கள் குவித்தது.
- ஒல்லி போப் இரட்டை சதமடித்து அசத்தினார்.
லண்டன்:
இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து சார்பில் பிராட் 5 விக்கெட்டும், ஜேக் லீச் 3 விக்கெட்டும், மேத்யூ பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்கம் முதல் இங்கிலாந்து வீரர்கள் அடித்து ஆடினர். ஜேக் கிராவ்லி 56 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் சதமடித்து 24 பவுண்டரி 1 சிக்சருடன் 182 ரன்களை விளாசினார். ஒல்லி போப் இரட்டை சதமடித்து 22 பவுண்டரி 3 சிக்சருடன் 205 ரன்கள் குவித்தார். ஜோ ரூட் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 352 ரன்கள் பின்தங்கிய நிலையில், அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஹாரி டெக்டர் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். மார்க் அடைர் 88 ரன் எடுத்து வெளியேறினார். ஆண்டி மெக்பிரின் 86 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், அயர்லாந்து 9 விக்கெட்டுக்கு 362 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டாங் 5 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 12 ரன் எடுத்து அபார வெற்றி பெற்று 1-0 என தொடரை கைப்பற்றியது. ஒல்லி போப் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
- ஒல்லி போப் 208 பந்துகளில், 3 சிக்சர்கள், 22 பவுண்டரிகளுடன் 205 ரன்கள் விளாசிய நிலையில் மேக்பிரின் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார்.
- இங்கிலாந்து அணி 82.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
லார்ட்ஸ்:
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, முதல் இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
பென் டக்கெட் 178 பந்துகளில், ஒரு சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் 182 ரன்கள் விளாசி ஹியூம் பந்தில் போல்டானார். ஒல்லி போப் 208 பந்துகளில், 3 சிக்சர்கள், 22 பவுண்டரிகளுடன் 205 ரன்கள் விளாசிய நிலையில் மேக்பிரின் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். ஜோ ரூட் 56 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் சேர்த்து மேக்பிரின் பந்தில் போல்டானார். இங்கிலாந்து அணி 82.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
— Spider Rashid (@RashidSpider) June 2, 2023
இந்நிலையில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணிக்காக தனது முதல் இரட்டை சதத்தை ஒல்லி போப் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் கடந்த 41 வருடத்தில் அதிவேக இரட்டை சதமாக இது பார்க்கப்படுகிறது. இவர் 207 பந்தில் 205 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய அணிக்கு எதிராக போத்தம் இரட்டை சதம் விளாசினார். இவர் 220 பந்தில் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்சர் மூலம் இரட்டை சதத்தை பதிவு செய்த ஒல்லி போப்புக்கு லார்ட்ஸ் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
- முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 56.2 ஓவர்களில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
- இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் 5 விக்கெட்டும், ஜாக்லீச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
லண்டன்:
இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 56.2 ஓவர்களில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் 5 விக்கெட்டும், ஜாக்லீச் 3 விக்கெட்டும், மேத்யூ போட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்தின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. முதல் விக்கெட்டுக்கு ஜாக் கிராவ்லி-பென் டக்கெட் ஜோடி 109 ரன்கள் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்தனர்.
கிராவ்லி 56 ரன்னில் அவுட் ஆனார். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 25 ஓவரில் ஒரு விக்கெட் இழப் புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. பென் டக்கெட் 60 ரன்னுடனும், ஒலிபோப் 29 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்