என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரபிக்கடல்"
- இந்தியா வந்த சரக்கு கப்பல் மீது அரபிக்கடலில் வைத்து டிரோன் தாக்குதல்.
- இதனால் பாதுகாப்பு பணியில் 3 போர்க்கப்பல்களை இந்தியா அப்பகுதியில் நிறுத்தியுள்ளது.
அரபிக் கடலில் லைபீரிய நாட்டு எண்ணெய் கப்பல் எம்.வி. கெம்புளூட்டோ மீது கடந்த 23-ந்தேதி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கடந்த 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தது.
இதேபோன்று செங்கடலில் பயணித்த கபோன் நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. கெம் புளூட்டோ சரக்கு கப்பல் மீது 23-ந்தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் அரபிக்கடலின் மேற்கு பகுதியில் இந்திய எல்லையில் வைத்து தாக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். மோர்முகாவோ, ஐ.என்.எஸ். கொச்சி, ஐ.என்.எஸ். கொல்கத்தா ஆகிய 3 போர்க்கப்பல்கள் அரபிக் கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
தொலைதூர கண்காணிப்புக்கு அதிநவீன பி-81 என்ற ரோந்து விமானத்தையும் இந்திய விமானப்படை ஈடுபடுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே கடந்த 23-ந்தேதி தாக்குதலுக்கு உள்ளான எம்.வி. கெம் புளூட்டோ சரக்கு கப்பல் நேற்று மும்பை துறைமுகம் வந்தடைந்தது. இந்திய கடற்படையின் வெடிகுண்டு நிபுணர் குழு அந்தக் கப்பலை ஆய்வு செய்தது.
- தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.
- மாலத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
- தென்கிழக்கு அரபி கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறியுள்ளது.
- அரபி கடலில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை தாமதமான நிலையில் இப்போது அரபிக்கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
தென்கிழக்கு அரபி கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு பைப்போர்ஜாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை வங்கதேச மாநிலம் வழங்கி உள்ளது. பிபோர்ஜாய் என்றால் பேராபத்து என்று பொருள்.
தற்போது அரபிக்கடலில் உருவாகி உள்ள பிபோர்ஜாய் புயலானது வடக்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. அதன்படி இந்த புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமடைந்து வலுவானதாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த புயல் கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் கோவாவுக்கு மேற்கு, தென்மேற்கே 920 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 1050 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்பந்தரில் இருந்து தென்-தென் மேற்கே 1130 கிலோ மீட்டர் தொலைவிலும் போர்பந்தருக்கு தெற்கில் 1430 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் பிபோர்ஜாய் புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக தீவிரம் அடைந்து கிழக்கு மத்திய அரபி கடலில் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இந்த புயலால் கேரளா முதல் மகாராஷ்டிரா வரையிலான அரபிக் கடல் பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அப்போது அரபி கடலில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன்காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- அக்னி வெயில் முடிவடைந்த பின்னரும் கோடை வெப்பம் 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் கொளுத்தியது.
- குறைந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை மைய தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கோடை காலம் முடிவடைந்ததும் ஜூன் முதல் தேதியே தென் மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அக்கினி வெயில் முடிவடைந்த பின்னரும் கோடை வெப்பம் 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் கொளுத்தியது.
இதனால் தென்மேற்கு பருவமழை தள்ளிப்போகும் நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளது.
அதன்படி ஜூன் 8-ந் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிகுறிகள் லட்சத்தீவு, நிக்கோபார், அரபிக்கடலில் காற்று வீசுவதில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இன்று தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளது. இது மேலும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதன்மூலம் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம்.
- அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மே மாதம் முடிந்துள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாமலேயே உள்ளது. கோடை முடிந்து எப்போதும் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை மைய நிபுணர்கள் கணித்து உள்ளனர்.
இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரபிக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 5-ந்தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தனியார் வானிலை நிபுணரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். இதே போன்று வங்கக் கடலிலும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த புயல் இன்னும் சில தினங்களில் உருவாகும் என பிரதீப்ஜான் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் இது போன்ற புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில்தான் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இதில் அரபிக்கடலில் தான் முதலில் புயல் உருவாகிறது. பின்னர்தான் வங்கக்கடலில் புயல் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புயல் உருவாகும் நேரத்தில் தரைகாற்று அதிகமாக வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வருகிற 5-ந்தேதி அரபிக்கடலில் புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கக்கடலில் 9- ந்தேதி புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அரபிக்கடலில் உருவாகும் புயல் தீவிரம் அடைந்து மேற்கு இந்திய கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா பகுதியை இந்த புயல் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்க கடலில் உருவாக உள்ள புயலின் தாக்கம் பற்றி தற்போது கணிக்க முடியாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்