என் மலர்
நீங்கள் தேடியது "பண்பொழி"
- விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- மாலையில் தங்கத்தேர் வீதி உலாவும் நடைபெற்றது.
கடையநல்லூர்:
பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 108 கலசபூஜை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், அஸ்திர ஹோமம், மகாபூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து விமான அபிஷேகம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை ரமேஷ் பட்டர் செய்தார். பிற்பகல் 2 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம், மாலையில் தங்கத்தேர் வீதி உலாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் அருணாசலம் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.