என் மலர்
நீங்கள் தேடியது "வடம் பிடித்தல்"
- வைகாசி பிர மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
- சிறப்பு அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர்.
நீடாமங்கலம், கும்பகோணம் அருகே வலங்கைமானில் தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தீ ஸ்வரர் கோவில் (செவ்வாய் பரிகார தலம்) உள்ளது.
இக்கோவில் வைகாசி பிர மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரானது முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.
விழாவில் அறங்காவலர் குழு தலைவர் சிவராமகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் குணசேகரன் மற்றும் பாலகிருஷ்ணன், ராஜராஜசோழன், கரிகால சோழன், எடை மெஷின் பாலு, தவில் மாரிசாமி, வைத்தீஸ்வரர் நற்பணி மன்ற மகேஷ், பாலாஜி மற்றும் குழுவினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.