என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலை உற்பத்திக்கு"

    • தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறி மூலம் 30 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர்.
    • 30 சதவீத கூலி உயர்வாக, வேட்டிக்கு, 24ல் இருந்து 7.20 ரூபாய் உயர்ந்தி, 31.20 ரூபாயும், சேலைக்கு, 43 ரூபாயில் இருந்து 12.90 ரூபாய் உயர்த்தி 55.91 ரூபாயாகவும் வழங்க வேண்டும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதா வது:-

    தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறி மூலம் 30 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர். அரசின் இலவச வேட்டி, சேலை, 228 விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் தொடக்க சங்கம் மூலம் 68 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது. இதன் மூலம், பல லட்சம் நெசவா ளர்கள் வேலை பெறுகின்ற னர்.

    கடந்த, 2010–-11ல் வேட்டிக்கு 16 ரூபாய், சேலைக்கு 28.16 ரூபாய் கூலி வழங்கினர். 2011–12ல் வேட்டிக்கு–18.40 ரூபாய், சேலைக்கு–31.68 ரூபாய், 2015–-16-ல் வேட்டிக்கு– 21.60 ரூபாய், சேலைக்கு–39.27 ரூபாய், 2019ல் வேட்டிக்கு–24 ரூபாய், சேலைக்கு–43.01 ரூபாய் என உயர்த்தினர்.

    அதன்பின் கூலி உயரவில்லை. கடந்த, 2010 முதல், 13 ஆண்டில் வேட்டி க்கு 8 ரூபாயும், சேலைக்கு 14.85 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதேநேரம் கடந்த, 4 ஆண்டில் தொழிலாளர் ஊதியம், குடோன் வாடகை, மின் கட்டணம், விசைத்தறி உதிரி பாகங்கள், போக்கு வரத்து செலவு, பஸ் கட்டணம், எலக்டரானிக் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

    எனவே 30 சதவீத கூலி உயர்வாக, வேட்டிக்கு, 24ல் இருந்து 7.20 ரூபாய் உயர்ந்தி, 31.20 ரூபாயும், சேலைக்கு, 43 ரூபாயில் இருந்து 12.90 ரூபாய் உயர்த்தி 55.91 ரூபாயாகவும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×