search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீறி"

    • நடவடிக்கை எடுப்பதற்காக 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
    • குமரியில் ஒரே மாதத்தில் 109 வாகனங்கள் பறிமுதல் ரூ.42 லட்சம் அபராதம் வசூல்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் விதிமுறை மீறி கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.

    31-ந்தேதி வரை தனி தாசில்தார்கள் தலைமை யிலான 7 சிறப்பு குழுவினரால் மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை மேற் கொள்ளப்பட்டது. மொத்தம் 273 வாகனங்களை சோதனை செய்ததில் 29 கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக கனிமங்கள் ஏற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதால் அவை கைப்பற்றப்பட்டு நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் இருந்து அபராத நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.

    கனிமவளத்துறை துணை இயக்குநர் தலைமையிலான மதுரை மண்டல பறக்கும் படையினர் மே 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கனிமங்கள் ஏற்றி சென்ற 195 வாகனங்களை சோதனை செய்ததில் 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்களி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக கனிமங்கள் எடுத்து சென்ற 9 வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு தொடர்புடைய நபர்கள் மீது தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக கனிமங்கள் எடுத்து சென்ற 27 வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அந்த வகையில் மாவட் டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் காவல் துறை வாயிலாக 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.10 லட்சத்து 47 ஆயிரத்து 710-ம், மதுரை மண்டல பறக்கும் படை வாயிலாக 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.17 லட்சத்து 41 ஆயிரம், தனி தாசில்தார்கள் தலைமையிலான சிறப்பு குழு வாயிலாக 29 வாகனங்கள் என மொத்தம் 109 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.14 லட்சத்து 17 ஆயிரம் என்று மொத்தம் ரூ.42 லட்சத்து 5 ஆயிரத்து 710 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    ×