என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராசிரியர் பலி"

    • நெப்போலியன் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
    • மணிவண்ணன் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது வேகமாக மோதியது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி பாத்திமா பகுதியை சேர்ந்தவர் நெப்போலியன் (வயது 35). இவர் நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராஷிணி (33) காரைக்கால் ஒ.என்.சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

    இவர்களது சொந்த ஊர் மன்னார்குடி வேலை காரணமாக காரைக்காலில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் நெப்போலியன் தனது காரில் நாகை மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரிக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் இரவு வீடு திரும்பினார். இதனையடுத்து காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்திற்கு லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை மயிலாடுதுறை மாவட்டவத்தை சேர்ந்த மணிவண்ணன் (36) ஓட்டிச் சென்றார்.

    அப்போது காரைக்கால் நிரவி அருகே நெடுஞ்சாலையில் நெப்போலியன் காரில் வந்தபோது எதிரே மணிவண்ணன் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொருங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்கள் காருக்குள் சிக்கிகொண்ட நெப்போலியனை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு நெப்போலியனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து ேபாலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேராசிரியர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
    • கொலை நடந்த 3 மணி நேரத்தில் மர்ம நபரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பதால் அப்பாவி மாணவர்கள், பொதுமக்கள் உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது.

    இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறைந்த பாடில்லை.

    இந்த நிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் கட்டிடத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தான். அவன் அங்கிருந்த பேராசிரியரை துப்பாக்கியால் சுட்டான்.

    இதில் பேராசிரியர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பின்னர் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

    இதையடுத்து துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த பேராசிரியரின் உடலை கைப்பற்றி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மர்ம நபர் குறித்து விசாரணை நடத்திய போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அவனை தீவிரமாக தேடினர். கொலை நடந்த 3 மணி நேரத்தில் மர்ம நபரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். அவன் மீது வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ×